விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாய்கொண்டு மானிடம் பாடவந்த*  கவியேன் அல்லேன்.* 
    ஆய்கொண்ட சீர்வள்ளல்*  ஆழிப் பிரான் எனக்கே உளன்,*
    சாய் கொண்ட இம்மையும் சாதித்து*  வானவர் நாட்டையும்,* 
    நீ கண்டுகொள் என்று*  வீடும் தரும் நின்றுநின்றே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாய்கொண்டு - (அருமையான) வாக்கைக் கொண்டு
மானிடம் - அற்பமனிதர்களை
பாட வந்த - பாடப்பிறந்த
கவியேன் அல்லேன் - கவி நானல்லேன்
ஆய் - (வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட

 

விளக்க உரை

பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப்பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார். “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முராரியும்.” என்றும் “நா வாயிலுண்டே நமோ நாரணாவென்று ஓவாதுரைக்கு முரையுண்டே” என்றும் சொல்லுகிறபடியே அவன் தன்னைத் துதிக்கைக்காகவே படைக்கப்பட்ட வாயைக்கொண்டு நீசரைக் கவிபாடப் பிறந்தவனல்லேன் நானென்கிறார் முதலடியில். ஆழ்வீர்! அனேக மஹர்ஷிகளும் மற்றும் முதலாழ்வார்கள் போல்வாரும் துதித்த எம்பெருமானையே நீரும் துதித்தால் என்ன ரஸமுண்டு? வெவ்வேறு விஷயமாகவன்றோ கவிபாடவேணும் என்று சிலர் சொல்ல, ஆய்கொண்ட சீர்வள்ளலாழிப்பிரானெனக்கேயுளன் என்கிறார். எம்பெருமானை நான் பேசுவது மற்றையோர் பேசினது போலவோ? “பெருங்கேழலார் தம் பெருங்கண்மலர்ப்புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம், ஒருவர் நம்போல்வருங் கேழ்பவருளரே” (திருவிருத்தம்) என்னும்படி தன் கடாக்ஷத்தை என் பக்கலிலேயே ஒரு மடை செய்தது போலத் தன்னைப் பற்றிக் கவிபாடுவதையும் என்னொருவனுக்கே உரியதாக்கி யருளினா னெம்பெருமான் என்றவாறு. எனக்கே என்ற ஏகாரத்தினால்- இப்படி எம்பெருமான் விஷயீகரித்தது என்னைத் தவிர வேறெருவரையுமில்லையென்பது தெரிவிக்கப்படட்தாம். ‘வலக்கையாழி இடத்தைச் சங்கமிவையுடைய மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு மாறுளதோவியம் மண்ணின் மிசையே” என்பர் மேலும்.

English Translation

I was not born to sing in praise of mortal man. The generous discus-Lord of great virtues is my subject. He provides me for my life here and hereafter, and even gives me charge of Indra's kingdom.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்