விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வம்மின் புலவீர்!*  நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,* 
    இம் மன் உலகினில்*  செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*
    நும் இன் கவி கொண்டு*  நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,* 
    செம் மின் சுடர் முடி*  என் திருமாலுக்குச் சேருமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புலவீர் - புலவர்களே!
வம்மின் - (நரஸ்துதியை விட்டு) வாருங்கள்;
நும்  மெய் -உங்களது உடலை
வருத்தி - சிரமப்படுத்தி
கை செய்து - தொழில் செய்து

 

விளக்க உரை

ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார். வம்மின் - காட்டுத்தீயில் அகப்பட்டவர்களை மடுவைக்காட்டி யழைப்பாரைப் போலே வாருங்களென்கிறார். புலவீர்! - நீங்கள் விவேகிகளாகையாலே நான் அழைக்கிற வாசியறிந்து வரலாமேயென்கிறார். ஆழ்வீர்! எங்களை நீர் அழைக்கிறதென்? எங்கள் ஜீவனத்திற்கு நாங்கள் வழிதேட வேண்டாவோ? பிறரைக் கவிபாடியாகிலும் எங்கள் தேஹயாத்திரையை நாங்கள் நடத்திப்போருகிறோம் என்று அவர்கள் சொல்ல, மெய்யே; ஜீவிக்க வேண்டினாலும் உங்கள் தரம் குலைய ஜீவிக்கவேணுமோ? உங்கள் தரம் குலையாமல் ஜீவிக்கலாகாதோ? உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார். “நும் மெய்வருத்திக்கைசெய்து உய்ம்மினோ” என்கிற விடத்திற்கு “கோட்டை சுமந்தும் புல்சீவி விற்றும் ஜீவிக்கப்பார்க்கலாகாதோ?” என்று பணிப்பாராம் எம்பார்.

English Translation

Come, Poets! Exercise your body and hands and live. Nobody is rich in this wide Earth, we have seen, Let each praise his chosen god, it will all reach my Tirumal finally, the Lord of radiant crown.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்