விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள்ளும் பயன் இல்லை*  குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,* 
    வள்ளல் புகழ்ந்து*  நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,* 
    கொள்ளக் குறைவு இலன்*  வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,*  என் 
    வள்ளல் மணிவண்ணன் தன்னைக்*  கவி சொல்ல வம்மினோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொள்ளும் பயன் இல்லை -நீங்கள் பெறும் பலன் சிறிது மில்லையாம்படி
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை - குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து
வள்ளல் புகழ்ந்து - உதாரனே! என்று கொண்டாடி
நும் வாய்மை இழக்கும் - உங்களுடைய ஸத்யத்தையிழந்தொழிகிற
புலவீர்காள் - புலவர்களே!

 

விளக்க உரை

ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக. பயனில்லை யென்பது மாத்திரமன்று; இழவுமுண்டு என்கிறார் மேல். (குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை யிழக்கும் புலவீர்காள்!.) நீங்கள் வாய் பெற்ற பேற்றை இழக்குமத்தனையே யுள்ளது என்கிறார். குப்பைகளைச் கிளறினால் கெடுதலான அம்சங்கள் தென்படுமே யல்லது நன்றானதொன்றும் தென்படமாட்டாது; அதுபோல நீசர்களின் சரிதைகளைக் கவிபாடப்புகுந்தால் மறைந்து கிடக்கும் மாசுகள் தாம் வெளிவரும் என்று அநுபவத்திற்குப் பொருத்தமான அருளிச் செய்கிற அழகு காண்மின்.

English Translation

O Poets with mastery over words! You waste it in praising vile useless trash as great fortune! Come and praise the benevolent Lord-most-perfect. He shall provide for your needs without diminishing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்