விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒழிவு ஒன்று இல்லாத*  பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,*  போம் 
    வழியைத் தரும் நங்கள்*  வானவர் ஈசனை நிற்கப் போய்,*
    கழிய மிக நல்லவான்*  கவி கொண்டு புலவீர்காள்,* 
    இழியக் கருதி*  ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒழிவு ஒன்று இல்லாத - ஒழிவு சிறிதுமில்லாத
பல ஊழி ஊழிதோறு- காலத்துவமுள்ளதனையும்
நிலாவ  - நிலைநின்று அநுபவிக்கும்படி
போம் - செல்லக்கடவதான
வழியை - வழிபாடாகிய கைங்கரியத்தை

விளக்க உரை

பரமவிலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்பமணிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார். ஒரு விச்சேதமில்லாதபடி யாவதாத்ய பாவியான காலமெல்லாம் நிலைநின்று அநபவிக்கும்படி செல்லக் கடவதாயுள்ள வழிபாடான கைங்கரியத்தைத் தந்தருளி நம்மை ஆட்கொள்பவன் எம்பெருமான்; இங்ஙனே கைங்கரியம் செய்கிற நித்யஸூரிகளை ஒரு நாடாகவுடையவன்; இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்தில் எத்தனையூழிகாலம் கவிபாடினாலும் ஏற்றிருக்கும்; பாடுவதற்கும் மெய்யான திருக்குணங்கள் எல்லைகடந்தவையுண்டு; பாடுகிறவர்களுக்கும் ஸகலபுருஷார்த்த ஸித்தியுண்டு; பாட்டுக்கும் மிக்க சிறப்புண்டு; இப்படியிருக்க, தகாத விஷயங்களைத் தேடித்திரிந்து மானிடம்பாடி அதோகதியையடையப் பார்க்கிறீர்களே, இதுவென்கொல் என்கிறார். வழியைத் தரும் என்பதற்கு அர்ச்சிராதிமார்க்க கதியைக் கொடுத்தருள்கின்ற என்று பொருள்கொள்வாருமுளர். வானவரீசனை நிற்க - வானவரீசனை விட்டு என்றபடி. இனி, ‘ஈசனை’ என்ற ஐகாரத்தைச் சாரியையாக வைத்து முதல் வேற்றுமைப் பொருள் கொள்ளுதலுமொன்று. “இவன் நம்மை நோக்கி ஒரு கவிபாடுவானோ” என்று எம்பெருமான் ஆசையோடிருக்க- என்று ரஸமயமான பொருள் கூறுவர் நம்பிள்ளை.

English Translation

O Poets of sweet heavenly excellence! When the Lord of the celestials, Our Lord is there to show the way for all times, you stop to sing a mortal's praise! Of what use is it?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்