விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புலம்பு சீர்ப்*  பூமி அளந்த பெருமானை,* 
    நலம்கொள்சீர்*  நன் குருகூர்ச் சடகோபன்,*  சொல் 
    வலம் கொண்ட ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்து, 
    இலங்குவான்*  யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சொல் -அருளிச்செய்த
வலம் கொண்ட - மிக்க ஆற்றலையுடைய
ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள்
இவை ஓர் பத்தும்- இப்பத்துப் பாசுரத்தையும்
சொன்னால் - ஓதினால்

விளக்க உரை

இத்திருவாய்மொழியின் இயல்மாத்திரத்தைத் தரித்தவர்கள் ஆரேனுமாகிலும் இதில் ஆசம்ஸித்தபடியே யநுபவிக்கையில் தட்டில்லாத பரமபோக்யமான திருநாட்டிலே செல்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. உலகமெல்லாம் கொண்டாடும்படியான திருக்குணங்களையுடையனாய்க்கொண்டு, பூமியையளந்த ஸர்வேச்வரனைக் குறித்து ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள் இவையுமோர் பத்து சொன்னால் யாவரும் இலங்குவான் (இலங்குகின்ற வானுலகை) ஏறுவர். இங்கு ஆழ்வார்க்கு நலங்கொள் சீர் என்று விசேஷணமுள்ளது; கரணங்களும் சேதந ஸமாதியாலே விடாய்த்து, ஓர் இந்திரியத்தின் வ்ருததியை மற்றொரிந்திரியம் ஆசைப்பட்டு, இவையெல்லாவற்றின் வ்ருத்தியையும் தாம் ஆசைப்பட்டு இப்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கும்படியான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையுடையரான ஆழ்வார் என்றபடி. வலங்கொண்டவாயிரம் = வலம் என்றது பெலம் என்றபடி; ப்ரதிபாத்யவஸ்துவை உள்ளபடி ப்ரதிபலிக்கவல்ல ஸாமர்த்தியத்தையுடையதென்றவாறு. பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கே ஸம்பவிக்ககூடிய நிலைமையை இத்திருவாய்மொழியில் ஆழ்வார் ஆசைப்பட்டதனால் “இங்கு வான் ஏறுவர்” என்று தேச விசேஷப்ராப்தியைப் பயனுரைத்துத் தலைக்கட்டினாரென்க.

English Translation

This decad of the well-made thousand song by wealthy Kurugur city's Satakoppan addresses the Lord who measured the Earth. Those who sing it will ascend Heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்