விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாற்றுத்தாய் சென்று*  வனம்போகே என்றிட* 
  ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து*  எம்பிரான்! என்று அழ* 
  கூற்றுத் தாய் சொல்லக்*  கொடிய வனம் போன* 
  சீற்றம் இலாதானைப் பாடிப் பற* 
  சீதை மணாளனைப் பாடிப் பற.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாறு தாய் - தாயானவள்;
சென்று - சென்று.;
வனமே போகு என்றிட - ‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க;
ஈற்றுத்தாய் - பெற்ற தாயாகிய கௌஸல்வையானவள்;
பின் தொடர்ந்து - (தன்னைப்) பின்தொடர்ந்து வந்து;

விளக்க உரை

ஸுதா கல்யாணத்தின்பிறகு தசரதசக்ரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய முயலுகையில் மந்தரை சூழ்நிலையால் மனங்கலக்கப்பட்ட கைகேயி தனக்கொழுநரான தசரதரைநோக்கி, முன்பு அவர் தனக்குக் கொடுத்திருந்த இரண்டு வரங்களுக்குப் பயனாகத் தன் மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌஸல்யை மகனான இராமனைப் பதினான்கு வருஷம் வநவாஸஞ்செலுத்தவும் வேண்டுமென்று நிர்பந்திக்க, அதுகெட்டு வருந்திய தசரதர் ஸத்தியவாதியாதலால், முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும், இராமன் பக்கல் தமக்கு உள்ள அன்பினால் அவ்வரத்தை நிறைவேறுமாறு அவனை வனத்திற்குச் செல்லச் செல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற மையத்தில், கைகேயி இராமனை வரவழைத்து ‘பிள்ளாய்! உங்கள் தந்தை பரதனுக்கு நாடு கொடுத்துப் பதினான்கு வருஷம் உன்னைக் காடேறப் போகச் சொல்லுகிறார். என்ன, அச்சொல்லைச் சிரமேற்கொண்டு, அந்தத் தாயின் பேச்சையும் அவளுக்கு தனது தந்தை தந்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்ய பரிபாலனஞ் செய்தலினிமித்தம் இராபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாது தொடர்ந்த ஸீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தியை விட்டுப் புறப்பட்டு வநவாஸஞ் சென்றனனென்ற வரலாறு மஅறிக. மாற்றுத்தாய் என்று ஸுமித்ரையையும், கூற்றுத்தாய் என்று கைகேயியையுஞ் சொல்லுகிறதாக நிர்வஹிப்பராம் நாலூர்பிள்ளை. இப்பொருளில், “மாற்றுத்தாய்” என்றது மற்றைத்தாய் என்றபடி; அன்றிக்கே, மாறு என்ற ஒப்பாய், மாறானதாய்- பெற்ற தாய்க்குப் போலியான தாய் என்னவுமாம். கூற்றுத்தாய்= கூற்று- யமன்; உடலையுமுயிரையும் வேறுகூறாககுபவனிறே. கொடுமையில் யமனை ஒப்பான் கைகேயி என்பதுபற்றி, அவள் “கூற்றுத்தாய்” எனப்பட்டாள். இனி, மாற்றுத்தாய் என்று கைகேயியையும், கூற்றுத்தாய் என்று ஸுமித்ரையையும் சொல்லுகிறதாக உரைத்தருளினர், திருவாய்மொழிப்பிள்ளை; கைகேயி, கௌஸல்யைக்குத் தன் நினைவாலே மாற்றந்தாயிறே; பரதன் நினைவுக்கு மேற்பொருந்தாமையாலும், மாற்றாந்தாய் எனப்படுவர். கூறுபட்ட ஹவிஸ்ஸை உண் கையாலே ஸுமித்திரை, கூற்றுத்தாய் எனப்படுவள்; கூறு + தாய், கூற்றுத்தாய். இவ்விரண்டு யோஜனையிலும் ஸுமித்ரை பெருமான் முகம்பார்த்துச் சொன்னதாகச் சொல்லப்பட்ட வசனம் ஸ்ரீஇராமாயணத்தில் இல்லையாகிலும், வுயர்வறமதிநலமருளப்பெற்ற இவர் இப்படி அருளிச்செய்கையாலே, இதிஹாஸந்தா புராணாந்தரங்களிலேயாதல் கல்பாந்தரத்திலேயாதல் உண்டென்று கொள்ள வேணுமென்பது, மணவாளமாமுனிகளின் திருவுள்ளம். தந்தை ஏவவேண்டுமென்பதை எதிர்பாராமலே இராமபிரான் “மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ,... இப்பணி தலைமேற்கொண்டேன். மின்னொளிர் கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்” (கம்பராமாயணம்) என்று சொல்லிப் புறப்பட்டமைதோன்றக் “கூற்றுத்தாய் சொல்லக் கொடியவனம்போன” என்றார். ‘தண்டகநூற்றவள் சொற்கொண்டு போகி” என்றும், “கைகேசி... குலக்குமா” காடுறையப்போவென்று விடை கொடுப்ப” என்றும், “கொடியவள் வாய் கூடிய சொற்கேட்டு” என்றும் இவர்தாமே மேலருளிச் செய்துள்ள பாசுரங்களையும் காண்க. “தொந்தலர் பூஞ்சுரிகுழற் கைகேசி சொல்லால் தொன்னகாந்துறந்து” என்றார் குலசேகராழ்வாரும். முதலடியில் போதே என்றவிடத்துள்ள ஏகாரத்தை வனம் என்பதனோடு கூட்டுக; ஒரு பெண் பெண்டாட்டி ‘என் பிள்ளைக்கு வேணும்’ என்று பறித்துக் கொண்ட ராஜ்யம் உமக்கு வேண்டா; ஒருவரும் அபிமானியாக வனமே உனக்கு அமையும்; ஆனபின்பு வனத்துக்கே எழுந்தருளவேணும் என்று நியமித்தவாறாம். புத்திரனைப் பிரிவதனால் வருத்தமுற்ற கௌஸல்யை “என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ” என்று கதறி அழுதுகொண்டு பின் தொடர்ந்தமை இரண்டாமடியில் விளங்கும். எம்பிரான்- விளி. “ஒருதாயிருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில், ஒரு தாய் சொலச்சென்ற தென்னரங்கா!” என்ற திருவரங்கத்துமாலைப் பாட்டை நினைக்க. பட்டங்கட்டிக்கொள்ள நிற்கிற நம்மைக் கட்டினகாப்போடு காட்டுக்குப் போகச் சொல்லுகிறார்களே என்று நெஞ்சில் இறையும் தளர்ச்சியடையாது “?????????????????” போகச் சொல்லுகிறார்களே என்று மகிழ்ச்சியுடன் பெருமாள் காட்டுக்குச் சென்றமைபற்றிச் “சீற்றமிலாதானை” என்றரென்க.

English Translation

The step mother said ‘Go to the forest’. Listening to the mortifying mother the Lord went into the forest without anger. His own mother followed him and cried ‘My Lord!’. Sing his glory and swing; sing the glory of Sita’s bridegroom and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்