விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருந்திய மா மருதின் இடை போய*  எம் 
    பெருந்தகாய்,*  உன் கழல்*  காணிய பேதுற்று,* 
    வருந்திநான்*  வாசகமாலை கொண்டு*  உன்னையே 
    இருந்து இருந்து*  எத்தனை காலம் புலம்புவனே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொருந்திய - ஒன்றோடொன்று பொருந்தி நின்ற
மா மருதின் இடை - பெரிய மருத மரங்களின் நடுவே
போய - தவழ்ந்து சென்று அவற்றைத் தள்ளி முறித்த
எம் பெரும்தகாய் - எம்பெருமானே!
நான் - அடியேன்

விளக்க உரை

உன்னுடைய குணங்களுக்குத் தோற்று உன்னைக் காணப்பெறாத வ்யஸனத்தாலே துக்கப்படுகிற நான் இன்ன மெத்தன காலம் துக்கப்படக்கடவேனென்கிறார். தம்மில் தரம் தெறிந்து நிற்கிற பெரிய மருதமரங்களின் நடுவே சென்று அவற்றை முறித்து உன்னை யெங்களுக்கு ஸ்வாமியாகத் தந்த பெரியவனே! உன்னுடைய திருவடிகளைக் காண வேணுமென்கிற ஆவலை உடையேனாய் அது நிறைவேறப் பெறாமையாலே மிகவருந்தி உன்னுடைய திருக்குணங்களுக்கு வாசகமான சப்த ஸந்தர்ப்பத்தைக் கொண்டு உன்னையே நோக்கியிளைத்திருந்து எத்தனை காலம் கூப்பிடக்கடாவேனென்கிறார். கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை க்ருஷ்ணனைத் திருவயிற்றில் கயிற்றினால் கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே எழுந்தருளிய பொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில் முன்நாரதர் சாபத்தால் அம்மரங்களாய்கிடந்த நள கூபரன் மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவரும் சாபம் தீர்ந்து சென்றனர். இந்தக் குபேரபுத்திரரர்கள் முன்பு ஒருகாலத்தில் பல அப்ஸரஸ் ஸ்திரீகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருக்கையில் நாரத மாமுனிவர் அங்கு எழுந்தருள, மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர் மாத்திரம் மதுபான மயக்கத்தினால் வஸ்த்ரமில்லாமலே இருக்க, நாரதர் கண்டு கோபம் கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபிக்க, உடனே அவர்கள் வணங்கி வேண்டிக் கொண்டதற்கு இரங்கி, ‘நெடுங்காலஞ் சென்ற பின்பு திருமால் உங்களருகே நெருங்குஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னைய வடிவம்பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப் போயினர்; இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில் கம்ஸனால் ஏவப்பட்ட இரண்டு அஸுரர்களும் ஆவேசித்துக் கிடந்தனர் என்றும் புராணம் கூறுகின்றது. “ஒருங்கொத்தவிணை மருதமுன்னியவந்தவரை” என்றும், “பொய்யாமாயமருதான வசுரரை” என்றும் பெரியாழ்வாரு மருளிச் செய்தனர்.

English Translation

O Lord who entered between the two dense Maruda trees! Singing your praise with my songs, I weep to see your lotus feet alone. Alas, how long must I remain here.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்