விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள்வன் நான் மாவலி*  மூவடி தா என்ற 
    கள்வனே,*  கஞ்சனை வஞ்சித்து*  வாணனை
    உள் வன்மை தீர,*  ஓர் ஆயிரம் தோள் துணித்த* 
    புள் வல்லாய்,*  உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாவலி - ‘மஹாபலியே!
நான் - நான்
மூ அடி -மூன்றடி நிலத்தை
கொள்வன் -  ஏற்றுக் கொள்வேன்,
தா - கொடுப்பாயாக’

விளக்க உரை

அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார். கொள்வன் நான் மாவலி மூவடிதாவென்ற கள்வனே! - குறியமாணுருவாகி மாவலி பக்கல் யாசகனாய் சென்றகாலத்து முந்துறமுன்னம் ‘கொள்வன் நான்’ என்றானாம; யாசகன் உதாரனைப் பலபடியாகப் புகழ்ந்து பேசிவிட்டு ‘இன்ன பொருள் எனக்கு நீ தரவேணும்’ என்று யாசிக்க வேண்டுவது முறைமையாயிக்க, வாமனன் அங்ஙனம் ஒன்றும் புகழ்ந்து பேசாதே வாய்திறந்து பேசும்போதே ‘கொள்வன் நான்’ என்றானாம்; என்றைக்கு யாசித்தறியாதவனாதலால் இன்னபடி சொல்ல வேணுமென்று அறிந்திலேன் போலும். வாமன மூர்த்தியின் மிக அழகிய வடிவத்தைக் கண்டு இவனுக்கு ஏதாவது தானம் பண்ணியே யாகவேணுமென்று குதூஹலங்கொண்ட மாவலி ‘இவன் நம் புக்கலில் தானம் பெறுவனோ மாட்டானோ’ என்று ஸந்தேஹித்திருக்க, அந்த நிலைமையைக் கண்ட வாமனன் அவனுடைய சங்கைதீரக் “கொள்வன் நான்” என்றானாகவுமாம்.

English Translation

O Wicked Lord who begged three steps and took the Earth! O Lord who destroyed Kamsa, and rides the Garuda bird! O Lord who cut as under the thousand arms of Bana! When, O when, will I join you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்