விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செவிகளால் ஆர*  நின் கீர்த்திக் கனி என்னும் 
    கவிகளே*  காலப் பண் தேன்*  உறைப்பத் துற்று,* 
    புவியின்மேல்*  பொன் நெடும் சக்கரத்து உன்னையே.* 
    அவிவு இன்றி ஆதரிக்கும்*  எனது ஆவியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கீர்த்தி கனி என்னும் கவிகளே - கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே
காலம் - காலத்திற்கு ஏற்ற
பண் - பண்களாகிற
தேன் - தேனிலே
உறைப்ப - மிகவும் செறிய

விளக்க உரை

என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார். இப்பாசுரத்தில் ஆவி என்பது எழுவாயாதலால் ‘செவிகளாலார’ என்று கூறப்பட்ட ஆசை ஆவிக்கு உண்டான ஆசையாகக் கொள்ளத்தக்கது. ஆவியானது தனக்குச் செவிகள் முளைக்கவேணுமென்றும் அவற்றாலே எம்பெருமானது கீர்த்திக்கவிகளை கேட்க வேணுமென்றும், ஆசைப்படுகிறபடி, அன்றி, தானே செவியாக மாற ஆசைப்படுகிறபடியுமாம். ‘செவிகளாலார’ என்றது செவிகள் வயிறு நிறையும்படியாக என்றபடி. கீர்ததியாவது கொண்டாடிக் கூறப்படும் திருக்குணங்களாம்; அவற்றைப் பற்றிப் பரமரஸிகர்களான பக்தர்கள் இயற்றும் கவிகள் பரமபோக்யமாக இருக்குமாதலால் “கனியென்னுங் கவிகள்” என்றார். “கவியென்னுங் கனிகள்” என்று சொல்ல வேண்டிய முறை ப்ராப்தமாயிருக்க அங்ஙனம் கூறாது “கணினென்னும் கவிகள்” என்றது கனிகளினும் மிக்க போக்யதாதிசயம் கவிகளில் இருக்கும்படியைக் காட்டுதற்காம். இங்கு ஈடு காண்மின்; “செவிகனிபோலிருக்கையன்றிக்கே கனி கவியாயிற்றென்கிறதிறே போக்யதாதிசயத்தாலே”.

English Translation

O Lord who wields a golden discus! While my ears feed on songs of your praise with fruit-like words dipped in the seasoned honey of music, my soul tirelessly craves for your company.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்