விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைகளால் ஆரத்*  தொழுது தொழுது உன்னை,* 
    வைகலும் மாத்திரைப்*  போதும் ஓர் வீடு இன்றி,*
    பை கொள் பாம்பு ஏறி*  உறை பரனே,*  உன்னை 
    மெய்கொள்ளக் காண(  விரும்பும் என் கண்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொள் பாம்பு ஏறி உறை பரனே - படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே!
என் கண்கள்- எனது கண்களானவை
உன்னை - தேவரீரை
கைகளால் ஆர தொழுது தொழுது - கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து

விளக்க உரை

கண்களானவை ‘கைகளுடைய பரிமாற்றமும் வேணும், தம் வ்ருத்தியான காட்சியும் வேணும்’ என்னாநின்றன வென்கிறார். “கண்கள் கைகளாரத்தொழுது காண விரும்பும்” என்று மூலமுள்ளது. கைகளால் தொழவேணுமென்பதைக் கண்கள் ஆசைப்படுவது எங்ஙனே என்று விமர்சிக்கவேணும்; விமர்சித்தால், கைகளின் வ்ருத்தியையும் கண்கள் ஆசைப்பட்டமை விளங்கும். “மாத்திரைப்போதும் ஓர் வீடின்றிவைகலும்” என்பது மத்யமதீபந்தயாயத்தாலே முதலடியிலும் ஈற்றடியிலும் அந்வயிக்கும்; அநவரதமும் கைகளால் தொழி வேணுமென்றும், அநவரதமும் காண வேணுமென்றும் விரும்புகின்றவாறு. “கைகளாலாரத் தொழுது தொழுது” என்றுள்ளதனால் ஸக்ருத்ப்ரணாம ஸம்ப்ரதாயம் பொருத்தமற்றது என்று சிலர் சொல்லப்பார்த்தார்கள். இங்கு நாம் ஸாரமாகச் சில விஷயங்கள தெரிவிக்க விரும்புகிறோம். ஸம்ப்ரதாயங்களில், ஒவ்வொரு பிரமாணத்தில் நோக்காக ஒவ்வொரு வகை ஆசாரம் நெடுநாளாகவே நிகழ்ந்து வருகின்றது. எந்த ஆசாரத்தையும் பழிக்க நாம் விரும்புகின்றிலோம். * பக்தவத் ப்ரவ்ருத்திவிரோதி ஸ்வப்ரவ்ருத்தி நிவருத்தியிலே உத்கடமான ஊற்றமுடைய வொரு வகுப்பும், நிவ்ருத்திலன்றிக்கே ப்ரவ்ருக்திகளிலேயே உத்கடமான ஊற்றமுடைய மற்றொரு வகுப்பும் எம்பெருமானுடைய தர்சனத்திலேயுள்ளது. பக்தியில் தலைநின்ற ஆழ்வார் போல்வாருடைய திவ்ய வாக்குகளில் “கைகளாலாரத் தொழுது” என்கிற இந்த ஸ்ரீஸூக்தி போலவே “தொழக் கருதுவதே துணிவது சூதே” “தொழுது மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு எழுது மென்னுமிது மிகை” இதியாதி ஸ்ரீஸூக்திகளும் காணப்படா நின்றன. இவற்றையெல்லாம் ஒருங்கே பர்யாலோசித்து ஸமந்வயப்படுத்தவேண்டுவது நிபுண நிரூபகர்களின் கடமை. நமஸ்காரதத்வமென்னும் நூலிலே விரியவுரைத்தோம்.

English Translation

O Lord who lies reclining one a serpent couch! I worship you with both hands, tirelessly, My eyes crave to see your form and keep you in their graze forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்