விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாசகமே ஏத்த அருள் செய்யும்*  வானவர் தம்- 
    நாயகனே,*  நாள் இளம் திங்களைக்*  கோள் விடுத்து,* 
    வேய் அகம் பால் வெண்ணெய்*  தொடு உண்ட ஆன் ஆயர்- 
    தாயவனே,*  என்று தடவும் என் கைகளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் கைகள் - எனது கைகளானவை.
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நயாகனே - வாக்கு மாத்திரமே துதிக்கும்படியாக அதற்கு அருள் செய்கின்ற தேவாதி தேவனே!
நான் இள திங்களை  கோள்விடுத்து- புதிய இளை உதய சந்திரன் போலப் பற்களின் ஒளியைப் பரவிட்டு
வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட - மூங்கிலால் செய்த வீடுகளில் வெண்ணெயைக் களவு கெய்து அமுது செய்த
ஆன் ஆயர் தாயவன - கோபால க்ருஷ்ணனே!

விளக்க உரை

தமது கைளுக்கு வாக்கின் வ்ருத்தியிலும் தம் வ்ருத்தியிலுண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார். “வாசகமே யேத்த அருள் செய்யும்” என்றவிடத்து வாசகமே என்ற ஏகாரம்- வாக்கு மாத்திரமே தேவரீரை யேத்தும்படியிருக்க வேணுமோ? (கைகளாகிய) நாங்களும் ஏத்தும்படி அருளலாகாதோ? என்ற கருத்தைக் காட்டும். வானவர்தம் நாயகனே!’ என்ற அடுத்த விளியின் சேர்த்தியையும் நோக்கி நம்பிள்ளை அழகாக அருளிச் செய்கிறபடி பாரீர் - “நித்யஸூரிகள் ஏந்தவிருக்கிற உனக்கு வாக்கு ஏதேனும் பச்சையிட்டதுண்டோ?” என்று ஆழ்வாருடைய திருவாக்கு ஏத்துகிறாப் போலவும் நித்யஸூரிகளின் வாக்கு ஏத்துகிறாப்போலவும் நாங்களும் ஏத்தும்படி யருள் செய்யவேணுமென்று கைகளின் பிரார்த்தனை போலும். நாளிளந்திங்களைக் கோள்விடுத்து = இதற்கு ஆபாத ப்ரதீதியில் ஒருபொருள் தோன்றும்; அதாவது சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கின வரலாறு ஒன்று உண்டாதலால் அது இங்கு அநுஸந்திகப்படுகின்றதாக. இந்தப் பொருள் இங்கு ஆபாத ப்ரதீதியில் தோன்றக்கூடுமாயினும், இங்கு இதுவன்று பொருள். “அபிநவ பூர்ணசந்திரகிரகணம் போலே திருமுத்தினொளி புறப்படும்படி திருப்புவனத்தைத் திறந்து” என்பது ஆறாயிரப்படி யருளிச் செயல். இப்பொருளையே ஸகல ஆசார்யரர்களும் அருளிச் செய்துள்ளார்கள். இவே ரஸவத்தரம். இங்கு உபமேயமான வஸ்து சொல்லப்படாதிருப்பினும் திங்கள் என்னும் உபமாநவாசம் திருமுததாகிற உபமேயத்தையே லக்ஷணையினால் தெரிவிக்கும். “தாவி வையங்கொண்ட தடந்தாமரைகேட்கே” என்றவிடமும் காண்க.

English Translation

O Lord of celestials blessing this tongue with words! Protector of the cowherd-clan! you ate butter by stealth in the hamlets of the Gopis, then flashed a crescent-moon smile! My hands forever yearn to feel you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்