விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெஞ்சமே! நீள் நகர் ஆக*  இருந்த என் 
    தஞ்சனே,*  தண் இலங்கைக்கு இறையைச் செற்ற 
    நஞ்சனே,*  ஞாலம் கொள்வான்*  குறள் ஆகிய 
    வஞ்சனே,*  என்னும் எப்போதும்,*  என் வாசகமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் வாசகம் - எனது வாக்கானது
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே - மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே!
தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே - தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே!
ஞானம் கொள்வான் குறள் ஆகிய - (மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான
வஞ்சனே - வஞ்சகனே!

விளக்க உரை

வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார். நெஞ்சுக்கு அருள்செய்ததுபோலு எனக்கும் அருள்செய்ய வேணுமென்று வாக்கு விரும்புவதாகப் பாசுரத்தில் எங்குள்ளது? என்னில்; “நெஞ்சமே நீணகராகவிருந்த” என்பதில் இவ்வர்த்தம் உய்த்துணரத்தக்கது. ‘எஞ்ஞான்றும் நெஞ்சிலேயிருந்து பேரமித்தனையோ? என் பக்கலிலும் ஒருகால் இருக்கலாகாதோ?’ என்ற கருத்து இதில் அமைந்துள்ளது. “பிறர் அகத்திற்கே போகின்றவரே!” என்று ஒருவனைக் குறித்துச்சொன்னால் “எம் அகத்திற்கும் ஒருநாள் வந்தாலாகாதோ” என்கிற கருத்துகிடைப்பதுபோல, ‘நெஞ்சமே’ என்ற ஏகாரத்தினால்- வேறு இந்திரியங்களிலும், பரமபதம் திருப்பாற்கடல் முதலியவற்றிலும் எம்பெருமான் விருப்பமற்றிருக்கும் தன்மை பெறுவிக்கப்படும். “கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தன கொல் ஏபாவம்- வெல்ல நெடியான் நிறங்கரியான உள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கவுரியது.

English Translation

O My refuge, living in the citadel of my heart! Lord who killed the Lanka king, Lord who came as a manikin and took the Earth! My tongue incessantly praises you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்