விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்*  சீர் 
    அடியானே,*  ஆழ் கடலைக் கடைந்தாய்!*  புள் ஊர் 
    கொடியானே,*  கொண்டல் வண்ணா!*  அண்டத்து உம்பரில் 
    நெடியானே!,*  என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சம் -எனது மனமானது
முடியானே -(உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே!
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே - மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே!
ஆழ் கடலை கடைந்தாய் - (தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே!
புள் ஊர் கொடியானே - கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே!

விளக்க உரை

தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார். “என்று” என்பதை முடியானே! இத்யாதியான ஒவ்வொரு விளியோடும் கூட்டுக: என்னெஞ்சம் முடியானே யென்று கிடக்கும்’ -மூவுலகும் தொழுதேத்தும் சீரடியானே என்று கிடக்கும் என்றிங்ஙனே தனித் தனி வாக்யமாக யோஜிப்பது, ஏழுலகுக்கும் தனிக்கோல் செலுத்துமவன் என்பதைக் கோடசொல்லித் தரக்கடவதான திருவபிஷேகமும் தானுமான வழகை யநுபவிக்க நெஞ்சு பாரித்திருக்கின்றமையை முடியானே! என்பதனால் தெரிவிக்கிறார். மூவுலகும் தொழுதேத்தும் சீரடியானே! என்று கிடக்கும் என்னெஞ்சம் = ‘குணமுள்ளவர்களைக் கைப்பற்றுவது, தோஷமுள்ளவர்களைக் கைவிடுவது’ என்கிற கொள்கை கொளாமையில்லாதவனாதலால் குணவான்களோடு துஷ்டர்களோடு வாசியற அனைவரும் வந்துபணிந்து ஏத்தப்பெற்ற திருடிகளை யுடையவன் எம்பெருமான், அந்த நிலைமையிலே தமது திருவுள்ளம் ஈடுபட்டிருக்கும்படியைக் கூறினாராயிற்று. “முடியானே - சீரடியானே” என்ற சோத்தி யழகு நோக்கத்தக்க. பொந்கோதஞ்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதுஞ் சோராமே ஆளுகின்றமைக்கு ஸக்ஷணமாகக் கவித்த திருவபிஷேகத்திலே கண்ணைச் செலுத்தினால் உடனே திருவடிகளிலே விழும்படியாயன்றோ விருப்பது.

English Translation

O Lord higher than the celestials, you churned the ocean! Lord of mountain hue, you bear the Garuda banner. Your feet are worshipped in the three worlds. O My heart lies yearning for you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்