விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
    நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 
    வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
    கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குலம் தாங்கு - ஸகல குலங்களுக்கும் ஆதாரமான
சாதிகள் நாலிலும் - பிராம்மணாதி ஜாதிகள் நான்கிலும்
கீழ் இழிந்து - கீழே போந்து
எத்தனை நலம் தான் இலாத - மிகவும் தாழ்வின் எல்லையிலே நின்ற
சண்டாளர் சண்டாளர்கள் ஆயினும் - சண்டாளரினும் கடை கெட்ட சண்டாளர்களேயானாலும்

விளக்க உரை

கையுந்திருவாழியுமான அழகைக்கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரர்களென்று நான்கு ஜாதிகள் ப்ரஸித்தங்களாகவுள்ளன; அவற்றிலும் கீழிழிந்த சண்டாளர்களிலும் மிக நீசரான சண்டாளர்களாயிருந்தாலும் அவர்கள் “வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று திருவாழியாழ்வானோடுண்டான சேர்த்தியில் ஈடுபட்டுப் பல்லாண்டு பாடுமவர்களாகில் அவர்களின் தாஸாது தாஸர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றாராயிற்று. இப்பாசுரத்தைப் பற்றிக்கொண்டு இக்காலத்தவர்கள் சில ஆக்ஷேபங்கள் கூறுவர்கள்; “எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்” என்று ஆழ்வார் அருளிச் செய்திருப்பதை நோக்கினால் ஆழ்வாரருளிச் செயலில் அன்புடையார் இதை அநுஷ்டாநர்யந்தமாகக்கொண்டு வரவேண்டியது ஆவச்யகமல்லவா? இங்ஙனே ஆழ்வார் அருளிச்செய்ததற்கு அர்த்தமுண்டா இல்லையா? இல்லையென்னில், ஆழ்வார் ஸ்ரீஸூக்தியை அவமதித்தபடியாகும். உண்டென்னில், அதன்படியே அனுட்டானித்திற் காட்டவேணுமல்லவா? என்று பலபல பேசுகிறார்கள். இவற்றுக்குப் பெரியோர் அருளிச்செய்யும் ஸமாதானமாவது:- “அமரவோரங்கமாறும் வேதமோர் நான்கு மோதித், தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பாராகில் நொடிப்பதோ ரளவிலாங்கே, அவர்கள் தாம் புலையர்போலும், அரங்கமாநகருளானே!” என்று தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச்செய்கிறார்; ‘சிறந்த பிராமணர்களாயிருந்தாலும் அவர்கள் பாகவத நிந்தனை செய்பவர்களாயிருந்தால் அவர்கள் சண்டாளரேயாவர்” என்று இப்பாசுரத்தினால் சொல்லப்படுகிறது; அப்படிப்பட்ட பாகவத நிந்தகர்கள் எத்தனையோபேர்கள் இவ்வுலகில் காணப்படுகிறார்கள்; சண்டாளரைக் கண்டால் விலகுமாபோலே அவர்களைக் கண்டால் விலகவேணுமே; அப்படி யாரேனும் விலகுவாருண்டோ; அந்தப்பாசுரத்தின் பொருள் அனுட்டானத்திற்கு வருமாகில் இந்தப் பாசுரத்தின் பொருளும் அனுட்டானத்திற்குவரும்- என்று சில பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

English Translation

What though a person be of lowely birth, -even a Chandala of the lowly Chandalas, -if he is a devotees of my discus-bearing gem-Lord, his servant's servant shall be my master, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்