விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அளிக்கும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    துளிக்கும் நறும் கண்ணித்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை,* 
    ஒளிக் கொண்ட சோதியை*  உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,* 
    சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்*  சன்ம சன்மாந்தரம் காப்பரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளிக்கும் பரமனை - உபகரிக்குமிடத்தில் தனக்கு மேலில்லாதபடி உபகரிக்குமவனும்
கண்ணனை - க்ருஷ்ணனாநவந்து அவதரித்தவனும்
ஆழி பிரான் தன்னை - திருவாழியைக் கையிலேந்தி மஹோபகாரங்கள் செய்யவனும்.
துளிக்கும் நறுகண்ணி - தேன் வெள்ளமிடா நின்று நறுமணம் மிக்க மாலையையணிந்துள்ளவனும்
தூ மணி வண்ணன் - அழுக்கற்ற மாணிக்கம் போன்ற வடிவையுடையவனும்

விளக்க உரை

ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாமல் அநந்யப்ரயோஜநர யிருப்பார்க்குத் தன் வடிவழகை அநுபவிக்கும் உஜ்வல ஸ்வபாவனான எம்பெருமானை அநுபவிப்பார் நமக்கு ரக்ஷகரென்கிறார். அளிக்கும் பரமன் என்றது- அளிக்கும் விஷயத்தில் தனக்கு மேற்பட்ட ஒருவனுமில்லாதவன் என்றபடி. அதாவது- உலகத்தில் ரக்ஷகர் என்று பேர் சுமப்பவன் பலருண்டாகிலும் எம்பெருமானே அத்விதீய ரக்ஷகன் என்பது கருத்து; (அல்லது) பிறர்க்குக் கொடுக்கும் விஷயத்தில் தனக்கு மேலில்லாதவன்- தன்னையே கொடுப்பவன் என்றுமாம். தன்னையே கொடுப்பதுமுண்டோ வென்ன, கண்ணனை என்கிறார். கண்ணனாய்த் திருவவதரித்து ஒவ்வொருவர்க்கும் தன்னை முற்றுண்டாகக் கொடுத்தமை உணர்க. ஆழிப்பிரான்தன்னை = பிறர்க்குத் தன்னையே கொடுப்பதுபோலத் தனது திவ்யாயுகத்தையும் அவர்களுக்கே தந்து உபகரிப்பவன். ஸூர்ய வம்சத்தவனான அம்பரீஷ சக்வர்த்திக்கு அங்ஙனம் உபகரித்தது இதிஹாஸ புராணப்ரஸித்தமன்றோ. இப்படியாக ஆச்ரிதரக்ஷணம் செய்தற்கென்றே தணிமாலை யிட்டிருப்பவனென்கிறது துளிக்கு நறுங்கண்ணி யென்பதனால். இங்ஙனே ஆச்ரிதரக்ஷணம் செய்வதுதானே காரணமாக அவனது திருமேனி புகர்பெற்று விளங்கும்படியை அருளிச் செய்கிறார் துமணி வண்ணன், ஒலிக்கொண்ட சோதியை என்பவற்றால்- ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை உள்ளத்துக் கொள்ளுமவர் ஒரு சலனமில்லாதபடி எம்மையாண்டு இந்த ஜன்மத்தோடு ஜன்மாந்தரங்களோடு வாசியற எஞ்ஞான்றும் ரக்ஷிக்குமவர்கள் என்றாராயிற்று. சன்ம சன்மாந்தரம் - வடசொல் தொடர்.

English Translation

My effulgent Lord of gem hue and nectared Tulasi has a discus in hand and protects all. Those who bear him in their hearts are my masters through every life, just se!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்