விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்*  நறும் துழாய்ப் 
    போதனை*  பொன் நெடும் சக்கரத்து*  எந்தை பிரான் தன்னை*
    பாதம் பணிய வல்லாரைப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    ஓதும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடையார்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாதனை - ஸ்வாமியாய்
ஞாலமும் வானமும் ஏத்தும் - உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய்
நறு துழாய் போதனை - பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய்
பொன் நெடு சக்கரத்து - அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான
எந்தை பிரான் தன்னை - எம்பெருமானை

விளக்க உரை

எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். நாதன் என்பதற்கு யாசிக்கப்படுபவன் என்றும் யாசிப்பவன் என்றும் ‘இருவகையாகவும் பொருள் கொள்ள வியாகரண சாஸ்த்ரம் இடந்தரும். அடியவர்களாலே யாசிக்கப்படுபவனானக இருப்பது போலவே அடியவர்களை எம்பெருமான்தான் யாசிப்பவனாகவும் இருக்கையாலே இருவகைப் பொருளும் பொருந்தும். சரணாகதிகத்யத்தில் * அர்த்திகல்பக* என்கிறவிடத்திற்கு வியாக்கியானமருளின ஆசிரியர்கள் இவ்விருவகைப் பொருளும் வியாக்கியானித் தருளினார்கள். ஞாலமும் வானமுமேத்தும் “நறுந்துழாய்ப்போதனை” என்ற ஸமபிவ்யாஹார ஸ்வாரஸ்யத்தால்,தோளும் தோள்மாலையுமான வழகைக் கண்டால் நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற அனைவரும் புகழும்படியா யிருக்குமென்கிற பொருள் கிடைக்கும். பகவானைப் பழிக்க வேணுமென்கிற கருத்துடையாரும் திருத்துழாய்மாலை யணிந்திருக்குமழகைக் கண்டவாறே ஏத்தாதிருக்க முடியாதன்றோ. பொன்னெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்தன்னை =கீழ்ச்சொன்ன திருத்துழாய் மாலையில் ஈடுபடாதவர்களையும் கையுந் திருவாழியுமான வழகாலே ஈடுபடுத்திக் கொள்பவனாயிற்று. “இன்னரென்றறியேன் அன்னே! ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்” என்று மதிமருளப் பண்ணவல்ல திவ்யாவுதங்க ளெல்லாவற்றிற்கம் உபலக்ஷணம்.

English Translation

My Lord of fragrant Tulasi wreath and golden discus is Lord of the celestials and mortals. Those who serve his devotees are my masters, through every blessed life, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்