விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
    பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 
    பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
    பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை - செறிந்த சுடர்ச் சோதி யுருவனாய்
பங்கயம் கண்ணனை - தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய்
பயில இனிய -பழகப் பழகப் பரம போக்யனாய்
நம் பால் கடல் சேர்ந்த பரமனை - நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருளும் பரம புருஷனான எம்பெருமானை
பயிலும் திரு உடையார் - நிரந்தராநுபவம் பண்ணுகையாகிற செல்வமுடையவர்கள்

விளக்க உரை

எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார். *இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ: * என்கிறபடியே அடியவர்களுக்காக ஸ்வஸங்கல்பத்தாலே பரிக்ரஹித்தருளும் திருமேனி தேஜோராசி மயமாயிருக்கும்படியைச்சொல்லகிறார். பயிஞ்சுடரொளி மூர்த்தியை என்பதனால். சுத்தஸத்வமயமாய் ஸ்வரூபப்ரகாசகமான திவ்ய விக்ரஹத்திலீடுபட்டவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்கை. பங்கயக்கண்ணை = கீழ்ச்சொன்ன வடிவழகிலும்கூட அகப்படாதாரையும் அகப்படுத்திக் கொள்ளவல்ல திருக்கண்ணழகிலே யீடுபட்டு “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே” என்றாற்போலே பேசுமவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்கை. “க: புண்டரீ கநயந: புருஷோத்தம: க” என்கிறபடியே திருக்கண்ணழகே பரத்வ ஸூசகமாகையாலே அந்தப் பரத்வத்திலே யீடுபட்டவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றவாறு. பயிலவினிய = ‘பயிலப்பயில வினிய’ என்றபடி. பகவத் விஷயத்தில் இடைவிடாத பரிசயம் பண்ணினாலும் இனிமை (-போக்யதை) ப்ரதிபத்தி விஷயமாகுமேயல்லது வைரஸ்யம் ஒருபோதும் தோற்றாதென்று கருத்து. இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “இப்படி வடிவழகும் கண்ணழகும் கண்ணழிவற்றிருக்கையாலே இனியதாயிருக்குமிறே. இதர விஷயங்கள் கிட்டுத்தனையும் ஒன்றுபோலேயாய், கிட்டினவாறே அகல வழிதேடும்படியாயிருக்கும்” என்று- எப்பொழும் நாள் திங்களளரண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுத மென்னும்படியான நித்யாபூர்வமான விஷயமாகையாலே எனை யூழிகாலம் இடையறாத பரிசயம் பண்ணினாலும் ஸாரஸ்யமே அதிகரித்துச் செல்லும் விஷயமென்றபடி.

English Translation

The Lord of lotus eyes and effulgent form, who is sweet to the heart, reclines in the ocean of milk. Those who worship him, -who ever they may be, -are my masters, through seven lives, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்