விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்கள் காண்டற்கு அரியன் ஆய்*  கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,* 
    மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்*  வானவர் ஈசனை,* 
    பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,* 
    பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்கள் காண்டற்கு - கண்களால் பார்ப்பதற்கு
அரியன் ஆய் - அருமைப்பட்டவனாகி
கருத்துக்கு - தியானத்திற்கு
நன்றும் எளியன் ஆய் - மிகவும் சுலபனாய்
மண் கொள் ஞாலத்து - பூமண்டலத்திலுள்ள

விளக்க உரை

இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார். காணப்பெறாத க்லேசத்தோடே அருளிச் செய்கிறார் கண்கள் காண்டற்க அரியனாய் என்று. பகவத் தத்வம் ஒருநாளும் காணக்கிடைக்க மாட்டாதது என்று மறந்து பிழைக்கலாமே, அப்படியும் பிழைக்கவொண்ணாதபடி நெஞ்சுக்கு முன்னிலையாயிருக்கும் படியை “கருத்துக்கு நன்றுமெளியனாய்” என்றிவதனால் அருளிச்செய்கிறார். ஆழ்வார்க்கு விச்லேஷமாவது - பாஹ்ய ஸம்ச்லேஷாபேக்ஷையாலே மாநஸா நுபவத்தக்கு வரும் கலக்கம்; ஸம்ச்லேஷமாவது - ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான ஜ்ஞாந ஸாக்ஷாத்காரம் என்றுணர்க. மண்கொள்ஞாலத்து இத்யாதி, நித்யஸூரிகளுக்கு அநுபாவ்யனாயிருப்பது போலவே, ஸம்ஸாரிகளென்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸுலபனானவன் என்றபடி. ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்திருப்பத்தால் எல்லாம் கிடைக்கிலும் கிடையாததான பகவத்பக்தியும் கிடைக்கும்; ஆதலால் இப்பதிகத்தை அப்யஸியுங்கோள் என்றாராயிற்று.

English Translation

This decad of the Pann-based thousand songs by sweet-bowered Valudi-land's kurugur Satokapan extol the invisible Lord. He is sweet to the heart. O, people, learn it and become his devotees!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்