விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்*  அவை அல்லன் ஆய்,* 
    உயர நின்றது ஓர் சோதி ஆய்*  உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*
    அயர வாங்கும் நமன் தமர்க்கு*  அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,* 
    தயரதற்கு மகன் தன்னை அன்றி*  மற்று இலேன் தஞ்சமாகவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துயரமே தரு - பரிதாபத்தையே தாக்கடவதான
துன்பம் இன்பம் ஆய் - புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான்
அவை அல்லன் ஆய் - அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய்
நின்றது ஓர் சோதி ஆய் - உயர்ந்த நிலமாகிய பரமபதந்தி லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய்
உலகு ஏழும் - எல்லா உலகங்களையும்

விளக்க உரை

மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தையறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத்தனமாகப் பற்றியிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார். துயரமே தரு என்கிற அடைமொழி துன்பவினையிற் போலவே இன்ப வினையிலும் அந்வயிக்கும். பாபம் போலவே புண்யமும் துயரம் தரக்கூடியதேயாகும். பரபத்திற்காட்டிலும் புண்யம் நன்றாயிருந்தேயாகிலும் மோக்ஷ மார்க்கத்திற்கு இடையூறாருந்திறத்தில் இரண்டும் ஒக்குமாதலாலும், “ததா வித்வாத் புண்யபாபே விதூய* இத்யாதியான உபநிஷத்தும் ஓதுகையாலும் புண்ய பாபங்களிரண்டுமே தொலையக்கடவனவாம். புண்யங்களுக்குப் பலனாக ஸ்வர்க்காநுபவம் முதலிய ஆபாஸ புருஷார்த்தங்கள் கிடைக்கும். பாவங்களுக்குப் பலனாக நரக வேதனைகள் கிடைக்கும்; பரம புருஷார்த்தத்தை விரும்பி நிற்பார்க்கு ஸ்வர்க்கநரகங்களிரண்டும் பரியாயமாதலால் புண்யஷார்த்தத்தை விரும்பி நிற்பார்க்கு ஸ்வார்க்கநரகங்களிரண்டும் பரியாயமாதலால் புண்ய பாபங்களிரண்டும் தொலைய வேண்டுமென்று சாஸ்த்ரம் சொல்லி நின்றது என்றுணர்க. “துன்பவின்ப வினைகளாய்” என்கிற ஸாமாநாதிகரண்யம்- துன்பவின்ப வினைகளைச் செய்விப்பவன் என்ற கருத்திலேயாயிற்று.

English Translation

He is the wicked karmas of pain and pleasure, he is beyond them too. He stands above as the effulgent Lord, he makes and swallows all the worlds. He is potent medicine against the agents of death. He came as Dasaratha's son. Other than him I have no refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்