விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்*  அவன் ஒரு மூர்த்தியாய்,* 
    சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்*  புகநின்ற செங்கண்மால்,* 
    நாற்றம் தோற்றம் சுவை ஒலி*  உறல் ஆகி நின்ற,*  எம் வானவர் 
    ஏற்றையே அன்றி*  மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோற்றம் கேடு அவை - ஜனன மரணங்களாகிற அவைகள்
இல்லவன் - இல்லாதவனும்
உடையான் - அவற்றையுடையவனும்
அவன் - ப்ரமாண ப்ரஸித்தனும்,
ஒரு மூர்த்தி ஆய் - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்

விளக்க உரை

ஆச்ரித விஷயத்தில் எல்லைகடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார். தோற்றாமாவது உற்பத்தி; கேடாவது விநாசம்; இவையிரண்டும் பகவத்ஸ்வரூபத்தில் இல்லாமையாலே தோற்றக்கேடவையில்லவன் என்றது. இவை ஸ்வரூபத்திலில்லாவிடினும், *எந்நின்றயோனியுமாயப் பிறந்தாய்* என்கிறபடியே ஸ்வேச்சையாலே பரிக்ரஹிக்கும் திருமேனிகளுக்கு உத்பத்தி விநாசங்கள் உள்ளனபோல் தோற்றுகையாலே ‘உடையான்’ என்றும் சொல்லிற்று. தோற்றக்கேடவையுடையான் என்றபடி. இப்பொருளைவிட, உடையான் என்றதற்கு ஸ்வாமியென்கிற பொருள் சிறக்கும்; இதுவே பதார்த்தங்களை யடையத் தனக்கு சேஷமாக வுடையான். நிருபாதிக சேஷி” என்பது ஈடு. அவனொரு மூர்த்தியாய் கருமம் காரணமான பிறப்பு இல்லாதவன் அடியார்களுக்காக விகரஹ பரிக்ரஹம் செய்பவனாய் என்றபடி.

English Translation

Through seven lies I have none but my Krishna, He is my smell and form and taste and sound and touch. The birthless, deathless, Lord with lotus eyes came as a big man-lion and gave refuge to Prahiada, the child-devotee of his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்