விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரியும் காற்றோடு அகல் விசும்பு*  திணிந்த மண் கிடந்த கடல்,* 
    எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
    கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்*  கண்ணன் விண்ணோர் இறை,* 
    சுரியும் பல் கருங் குஞ்சி*  எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரிய மேனி - சாமளமான வடிவை யுடையனாய்
செய்ய தாமரை கண்ணன் - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையனாய்
விண்ணோர் இறை - நித்யஸூரி நாதனாய்
சுரியும் பல் கரு குஞ்சி - சுருண்டு அலகலகாய்க் கருமையாகிறகுழற் கற்றையையுடையனாய்
சுடர் முடி - ஒளி பொருந்திய திருமுடியையுடையனாய்

விளக்க உரை

எம்பெருமானுடைய விபூதிவிஸ்தாரங்களை அநுபவித்துப்பேசுகிறார். திரியுமென்ற தொடங்கி “எரியுந்தீயோடு” என்னுமளவும் பஞ்ச பூதங்கள் பேசப்பட்டன. இப்பஞ்ச பூதங்களும் எம்பெருமானிட்ட வழக்கு. சந்திரன் ஸூர்யன் முதலான தேவர்களும் மனிதர்களும் விலங்குகளும் மற்றுமுள்ள யாவையும் அப்படியே. ஆக முன்னடிகளால் எம்பெருமானுடைய ஜகதாகாரத்வம் சொல்லப்பட்டு, மேல் அஸாதாரண விக்ரஹயுக்தனா யிருக்குமிருப்பு சொல்லப்படுகிறது. - கரியமேனியன் செய்யதாமரைக்கண்ணன் விண்ணோரிறை சுரியும் பல்கருங்குஞ்சி எங்கள் சடர் முடியண்ணல் கண்ணன் தோற்றம் - திரியுங்காற்றோடகல்விசும்பு திணிந்தமண் கிடந்த கடல் எரியுந் தீயோடிருசுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் என்று அந்வயக்ரமம். முற்றுமாய் என்றது ‘முற்றுமாம்’ என்றபடி. ஆறாயிரப்படியை நோக்குமிடத்து, பாசுரமுள்ளபடியே அந்வயக்ரமத்தைப் பிள்ளான் திருவுள்ளம் பற்றினகாகப் புலப்படுகின்றது; அண்ணல் தோற்றமே- “எம்பெருமானை நான் காணப்பெற்றேன்” என்பது ஆறாயிரம்.

English Translation

My Lord Krishna of dark hue, lotus eyes, dark locks and radiant crown is the blowing wind, the sky and hard Earth. He is the rolling ocean, the burning fire, the orbs and the gods. Mortals and the things everywhere are also him, the Lord of gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்