விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைம்மின் நும் மனத்து என்று*  யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை* 
    எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,*  வானவர் 
    தம்மை ஆளும் அவனும்*  நான்முகனும் சடைமுடி அண்ணலும்,* 
    செம்மையால் அவன் பாத பங்கயம்*  சிந்தித்து ஏத்தித் திரிவரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நும் மனத்து - உங்கள் நெஞ்சிலே
வைம்மின் என்று - வையுங்கள் என்று
யான் உரைக்கின்ற - என்னால் சொல்லப்படுகின்ற
மாயவன் - மாயோனுடைய
சீர்மையை - சீல குணத்தை

விளக்க உரை

மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார். “சிந்தியுங்கோள்!” என்று அடிக்கடி நான் சொல்லிக்கொண்டு வருகிற எம்பெருமானுடைய சீலத்தை நான் சொல்லுவது ஒருபுறமிருக்கட்டும்; தங்களையே கடவுளராக மதித்திருக்கின்ற இந்திரன் பிரமன் உருத்திரன் முதலானாருங்கூடத் தங்களுடைய செவ்வைக் கேட்டை விட்டு ருஜுப்ரக்ருதியுடனே அப்பெருமானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகின்றார்கள்; அன்னவர்களும் வந்து பணியலாம்படி அவன் தன்னை அமைத்துக்கொடுக்கின்றானென்றால் இது எப்படிப்பட்ட சீலமென்று பாருங்கள்; நானெடுத்துரைக்க வேண்டுவதோ இரு! என்கிறார். என்று+யான் என்றியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விதி. எம்அனோர்கள்-எம்மனையவர்கள்; எம்மைப்போன்றவர்கள் என்றபடி.

English Translation

When the great Indra himself, Brahma and Siva too, room about contemplating his radiant lotus feet, what can a person of my nature say about the grace of the Lord? So let it be.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்