விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூவர் ஆகிய மூர்த்தியை*  முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,* 
    சாவம் உள்ளன நீக்குவானை*  தடங் கடல் கிடந்தான் தன்னை,* 
    தேவ தேவனை தென் இலங்கை*  எரி எழச் செற்ற வில்லியை,* 
    பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்*  பரவுமினோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூவர் ஆகிய மூர்த்தியை - மூவரும் தானே என்னலாம் படி யுள்ளவனாய்
முதல் மூவர்க்கும் - முதல்வராகச் சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் பிரமனீசன் என்ற மூவர்க்கும்
முதல்வன் தன்னை - காரண பூதனாய்
சாவம் உள்ளன நீக்குவாளை - (அவர்களுக்கு நேரும்) துன்பங்களை யெல்லாம் போக்குபவனாய்
தட கடல் - விசாலமான திருப்பாற்கடலிலே

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நிரூபித்த பரத்வத்தைக் கேட்டவர்கள் ‘இப்படிப்பட்ட பராத்பரனானவனை நாங்கள் ஆச்ரயிக்க எங்ஙனே கூடும்? என்று கங்கிக்க, அப்படிப்பட்டவன்தானே உங்களோடு ஸஜாதீயனாய் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான் என்ற அவதார வெளிமையை இப்பாட்டில் உணர்த்துகின்றார். “மூவராகிய மூர்த்தியை” என்பது கீழ்ப்பாசுரத்தின் அநுபாஷணம். இது அந்தாதித் தொடைக்குச் சேர அமைந்த அநுபஷணமென்ற கொள்ளவேண்டா; “மூவராகிய மூர்த்தி” என்றதனால் ஸ்வரூபைக்யம் சொல்லுகிறது என்ற சிலர் மயங்குதற்கு இடமுண்டாதால் அந்த மயக்கத்திற்கு இடமறும்படி அருளிச் செய்வதற்காகவே அஜபாஷணம் செய்கிறபடி. “முதல் மூவர்க்க முதல்வன்தன்னை” என்ற அடுத்தபடியாக ஸ்பஷ்டமாயருளிச் செய்கையாலே மூவராகிய என்றவிடத்துள்ள அபேத நிர்த்தேசம் கார்யகாரணபாவ ப்ரயுத்தமென்று தெளியக்கடவது. முதல் மூவர் = அரி அயன் அரன் என்றமூவர்; அயனுக்கும் அரனுக்கும் முதல்வன்னென்றால் ஒக்கும்; அரியையும் சேர்த்து அவனுக்கும் முதல்வன் என்றால் எங்ஙனே பொருந்தும் என்று ஒரு சங்கையுண்டாகும்; இங்கே நம்பிள்ளை அருளிச் செய்கிறார் காண்மின்;- “தான் இவர்களுக்கக் காரணபூதனானா வோபாதி தனக்கு அவ்வருகு காரணாந்தரமின்றிக்கே யிருக்குமென்றபடி; *ஆத்மேச்வரம்* என்கிறபடியே.” - தனக்கும் தானே காரணபூதனென்றதனால் தனக்கு வேறொரு காரணபூதனில்லை யென்பது பெறப்படும் என்றதாயிற்று. அன்றியே, இந்திரனைக் கூட்டி மூவர் என்றதாகக்கொண்டால் சங்கைக்கே உதயமில்லை.

English Translation

So praise the Lord of lotus eyes, redeemer of Karmas, He lies in the deep ocean, worshipped by the celestials. He is the Lord of Brahma, Siva and Indra, he destroys our Karmas. He wielded a mighty bow and burnt Lanka to dust.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்