விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீர்ந்த அடியவர் தம்மைத்*  திருத்திப் பணிகொள்ளவல்ல,* 
    ஆர்ந்த புகழ் அச்சுதனை*  அமரர் பிரானை எம்மானை,*
    வாய்ந்த வளவயல்சூழ்*  தண் வளங் குருகூர்ச்சடகோபன்,* 
    நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து*  அருவினை நீறு செய்யுமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீர்ந்த - தனக்கே அற்றுத் தீர்ந்த
அடியவர் - விரோதிகள் அற ஸ்வீகரித்து
பணி கொள்ள வல்ல - (அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும்
ஆர்ந்த புகழ் - நிறைந்த புகழுடையவனும்
அச்சுதனை - அச்யுத னென்னும் திருநாமமுடையவனும்

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. உபாயமும் உபேயமும் அவனே என்கிற திண்ணிய அத்யவஸாய முடையவர்கள் தீர்ந்தவடியவர் எனப்படுவார்; அவர்களைத் திருத்திப் பணிகொள்ளுகையாவது - விரோதிகளைப்போக்கி அடிமை கொள்ளுகையாம். கீதையில் “தேஷாம் ஸததயுக்தாநாம்” என்றவிடத்துக்கு பாஷ்யமருளிச் செய்யாநின்ற எம்பெருமானார் - (ஸததயுக்தாநாம்) எப்போதும் கூடியிருக்கவிரும்புகின்றவர்களுக்க என்று அர்த்தமருளிச் செய்தார்; அதுபோலவே இங்கும் தீர்த்தவடியவர்தம்மை என்பதற்கு “தனக்கே அற்றுத்தீருவேணுமென்று ஆசை கொண்டிருக்கின்ற அடியவர்களைத் திருத்தி அடிமைகொள்ளமவன் என்றுமாம். ஆர்ந்தபுகழ் அச்சுதனை = ஆச்ரிதரக்ஷணம் பண்ணித் தான்படைத்த புகழ் ஒரநாளம் நழுவப்பெறாதவன் என்றபடி. அமரர்பிரானை எம்மானை = தானொருவனுளன் என்று மறியாதவென்னை * அயர்வறுமமரர்களோடொக்க அடிமைகொண்டவனென்றவாறு. அம்மானை என்று பன்னீராயிரப்படியில் பாடம். ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்துள் இப்பதிகம் பகவத் குணாநுஸந்தானத்தினால் விக்ருதராகாதபடி பண்ணும் மஹாபாபங்களை நீறுபடுத்துமென்றாராயிற்று.

English Translation

This decad of the thousand songs, Achyuta, Lord who corrects devotees and accepts them, is by Satakopan of fertile kurugur fields, Those who master it will win over their strong karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்