விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருமமும் கரும பலனும் ஆகிய*  காரணன் தன்னை,* 
    திருமணி வண்ணனை செங்கண் மாலினை*  தேவபிரானை,*
    ஒருமை மனத்தினுள் வைத்து*  உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,* 
    பெருமையும் நாணும் தவிர்ந்து*  பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருமமும் - ஸாதந ரூபமான கர்மங்களும்
கரும பலனும் - அக்கருமங்களால் ஸாதிக்கப்படும் பலன்களும்
ஆகிய - தானிட்ட வழக்காம்படியுள்ள
காரணன் தன்னை - ஜகத்காரண பூதனும்
திரு மணிவண்ணனை - அழகிய மணிபோன்ற வடிவையுடையவனும்

விளக்க உரை

பகவத்குணங்களைக் கேட்டால் விகாரப்படாமலிருக்கு மிருப்பாகிற அவிவேகத்தைத் தவிர்த்து எல்லீரும் அவனது திருக்குணங்களை யநுஸந்தித்துப் பரவசமாய் லஜ்ஜாபிõமனங்களைவிட்டு அவனை ஏத்துங்கோ ளென்கிறாரிப்பாட்டில். புண்யபாபரூபமான கருமங்களுக்கும் அவற்றின் பலன்களுக்கும் நியாயமகனாய் ஸகல ஜகத்காரணபூதனாய் நீலமணிவண்ணனாய்ப் புண்டரீகாக்ஷனான எம்பெருமானை, பரயோஜநாத்தருசி கலசாத நெஞ்சையுடையராய்ப் பரம பக்தியுந்தராய் அஹங்காரம் முதலிய தோஷங்களற்றவராய் விஷயாந்தரப்பற்று அற்றவர்களாய்க் கொண்டு ஏத்துங்கள் என்றாராயிற்று. கருமுமும் கருமபலனுமாகிய = கருமமென்று புண்யபாபரூப கர்மங்களைச் சொன்னபடி. அவை எம்பெருமான் தானேயிக்கையாவது என்னென்னில்; அக் கருமங்களை அனுட்டிப்பவர்கட்கு அந்தர்யாமியாயிருந்து கர்மநிர்வாஹகனாயிருக்கையாம். கருமபலனும் தானேயாயிருக்கையாவது- கருமங்களை அனுட்டித்தாலும் அவை அசேதநக்ரியையாகையாலே தாமே பயனளிக்கமாட்டாமை பற்றிப் பயனளிப்பவன் பரமசேதநனான தானேயிருக்கை. (ஒருமைமனத்தினுள் வைத்து) ஒருப்ரயோஜனத்திற்காகவன்றிக்கே நெஞ்சிலேயிருக்கை தானே ப்ரயோனமாக நெஞ்சிலேவைத்து- என்று ஈடு. ஒருமை- ஒருபடிப்பட என்றபடி. பெருமையும் நாணும் தவிர்த்து- பகவத்குணங்களைக் கேட்டு விகாரப்படுதல் நமக்குத் தகுதியோ என்றிருக்கு மஹங்காரமும், ‘பிறரறிய நாம் விகாரமடைவது எங்ஙனே?’ என்றிருக்கிற வெட்கமும் தவிர்ந்து என்றபடி. பேதைமை தீர்ந்து = பகவத் குணங்களுக்குத் தோற்று விகாரப்படுவதை ஹேயமாக நினைத்திருக்கையாகிற அவிவேகம் நீங்கியென்றபடி.

English Translation

My Lord of gem hue and lotus eyes, the Lord of celestials, is the Karmas, their fruit and their cause. Dance and sing with oneness of heart, melting inside you. Lose your pride and shame and rave his praise like mad.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்