விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அமரர் தொழப்படுவானை*  அனைத்து உலகுக்கும் பிரானை,* 
    அமர மனத்தினுள் யோகு புணர்ந்து*  அவன் தன்னோடு ஒன்று ஆக,* 
    அமரத் துணிய வல்லார்கள் ஒழிய*  அல்லாதவர் எல்லாம்,* 
    அமர நினைந்து எழுந்து ஆடி*  அலற்றுவதே கருமமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் - நித்யஸூரிகளினால்
தொழப் படுவானை - ஸேவிக்கப்படுகிறவனும்
அனைத்து உலகுக்கும் பிரானை - ஸகல லோகங்களுக்கும் சேஷியுமான ஸர்வேச்வரனை
மனத்தினுள் அமர - நெஞ்சிலே ஊன்றி யிருக்கும்படி
யோக புணர்ந்து - யோகாப்யாஸத்தைப் பண்ணி

விளக்க உரை

இப்பாசுரத்திற்குப் பொருளுரைக்கும் வகையில் பன்னீராயிரப்படியுரைநாரரான அழகிய மணவாளச்சீயர்தவிர மற்ற வியாக்கியான கர்த்தர்கள் யாவரும் ஒரு மிடறாயிருப்பர்கள். உரைகாரர்மாத்திரம் வேறு வகையாக உரைய்டுகின்றார். அவ்வகையைப் பின்னர் எடுத்துரைப்போம். கைவல்ய புருஷார்த்தத்தில் ஊன்றியிருப்பவர்கள் தவிர மற்றையோரெல்லோரும் ப்ரேம பரவசராய் எம்பெருமானுடைய குணாநுபவம் பண்ணிக் களித்துக் கூத்தாடுவதே செய்யத்தக்கது என்கிறாரிப்பாட்டில்- என்கிறவிதுவே திருக்குருகைப்பிரான் பின்னான் முதலான ஆசிரியர்களின் திருவுள்ளம். அமரர்களால் தொ தொழப்படுகின்றவனாயும் ஸகலலோகங்களுக்கும் சேஷியாயுமிருக்கின்ற எம்பெருமானை நெஞ்சிலே ஊன்றியிருக்கும்படி யோகாப்யாஸத்தைக் கனக்கப்பண்ணி, கடைசியில் அவனோடுஸாம்யம் பெற வேணுமென்று ஆத்மமாத்ர போகத்தையே விரும்பும் ஸாஹஸிகர்களையொழிய- கைவல்யத்தில் அகப்படாதே பகவத்குணங்களுக்குத் தோற்றவர்களெல்லாரும் பகவத்குணங்களை நெஞ்சிலேயுற்றிருக்கும்படி ஸ்வயம் ப்ரயோஜநமாக அநுஸந்தித்துக் கிளர்ந்தாடியற்றுவதே கர்த்தவ்யம்- என்றாராயிற்று.

English Translation

The Lord, worshipped by celestials, is Lord of all creation. Those who reach him through yogic penance, find him in their hearts always. For all others, dancing and singing his praise is the only karma.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்