விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார்புனல் அம் தண் அருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,* 
    பேர்பல சொல்லிப் பிதற்றி*  பித்தர் என்றே பிறர்கூற,* 
    ஊர்பல புக்கும் புகாதும்*  உலோகர் சிரிக்க நின்று ஆடி,* 
    ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வார் புனல் அம் தண் அருவி - சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான
வட திருவேங்கடத்து - வடக்குத் திருமலையில் நிற்கிற
எந்தை - எம்பெருமானுடைய
பல பேர் - பல திருநாமங்களையும்
சொல்லி பிதற்றி - வாய்வந்தபடி சொல்லி

விளக்க உரை

ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம். “அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாளுபிஸ் தவ ததச் சீலாஜ் ஜடீபூயதே.” (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்கிறபடியே சீலுகுணத்திற்கு எல்லை நிலமான அர்ச்சாவதார நிலைமைகளில் ஈடுபட்டு, பித்தரென்றே பலருமேசும்படியான நிலைமையை யடைந்து ஒவ்வொரு திவ்யதேசத்து எம்பெருமான்களின் திருநாமங்களயும் வாயாரச் சொல்லி ஸம்பிரமித்துக் கூத்தாடுமவர்கள நித்யாநுபவரரான நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்க வுரியவர்கள் என்றதாயிற்று. பேர்பல சொல்லிப்பிதற்றி =புகழுநல் லொருவனென்கிற கீழ்த்திருவாய்மொழியில் எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுணா விபூதிகள் விஷயமாகத் தாம் பேசின பாசுரங்களெல்லாம் வகைவகையாக ஒவ்வொருபக்தர்களின் வாயிலும் வெளிவர வேண்டுமென்பது கருத்து. பித்தரென்றே பிறர்கூற “பேயரேயெனக்கு யாவரும் யானமோர் பேயனே” என்ற குலசேகராழ்வார் பாசுரமும், “அத்தா அரியே யென்றுன்னை யழைக்கப் பித்தாவென்ற பேசுகின்றார் பிறரென்னை” என்ற திருமங்கை யாழ்வார் பாசுரமும் இங்குக் காணத்தக்கன. “பித்தரென்றே பிறர்கூற” என்று இதை ஒரு விஷயமாக அருளிச் செய்யவேணுமோ வென்னில், ஸ்ரீவைஷ்ணவராயிருப்பவர்கள் வசைகூறிக் கைவிடுவதே மிகவும் உத்தேச்யமென்பது பெரியோர்களின் கொள்கை. வைஷ்ணவர்களுடைய விஷயீகாரத்தினும் அவைஷ்ணவர்கள் இகழுகையே புருஷார்த்தமென்று கருத்து” என்றார் நஞ்சியரும் ஒன்பதினாயிரப்படியில். ஸ்ரீவிபீஷணாழ்வான் ஸ்ரீராமகோஷ்டிணில் தனக்கு விஷயீகாரம கிடைக்காமற் போனாலும் அரக்கர் திரளில் தனக்குத் திரஸ்காரம் கிடைத்ததே பரமபாக்யம் என்று நினைக்கும் படியாயிருந்தது.

English Translation

Our Lord resides in Venkatam of cool water springs. Rave his name incessantly, be called a mad man, room through towns and hamlets, let the world mock at you, Jump and dance in ecstacy, be worshipped by the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்