விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மனிசரும் மற்றும் முற்றும் ஆய்*  மாயப் பிறவி பிறந்த,* 
  தனியன் பிறப்பிலி தன்னை*  தடங்கடல் சேர்ந்த பிரானை,* 
  கனியை கரும்பின் இன் சாற்றை*  கட்டியை தேனை அமுதை,* 
  முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்*  முழுது உணர் நீர்மையினார.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மனிசரும் - மநுஷ்ய யோநியாயும்
மற்றும் - தேவயோநியாயும்
முற்றும் ஆய் - மற்றுமுள்ள ஸகல யோநியாயும்
மாயம் பிறவி பிறந்த - ஆச்சரியமான பிறவிகளில் பறிந்தருளின
தனியன் - ஒப்பற்றவாய்

விளக்க உரை

மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில். மநுஷ்யரும் மற்ற தேவஜாதியும் அல்லாத திர்யக் ஜாதியுமெல்லாமாய்க் கொண்டு ஆச்சர்யமான அவதாரங்களைப் பண்ணி, எல்லாரோடும் ஸஜாதீயனாயிருக்கச் செய்தே மிகவும் விலக்ஷணனான அத்விதீயனாய், அந்த வைலக்ஷண்யத்திற்கு ஹேதுவான கர்மாதீந ஜந்மராஹித்யத்தையுடையனாய், அவதாரார்த்தமாக விசாலமான திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளுமவனாய், கோதற்ற இனிய கருப்பஞ்சாறும் கற்கண்டும் தேனும் அமுதும்போலே போக்யதைதானே வடிவெடுத்தவனான எம்பெருமானை உகந்து துதித்துக் கூத்தாடுமவர்கள் ஸகல சாஸ்திரங்களின் ஸாரப் பொருள்களையும் அறிந்தவர்களென்று கொண்டாடுதற்குரியர் என்றதாயிற்று. இரண்டாமடியில் பிறப்பிலிதன்னை என்றிருப்பது முதலடிக்கு விருத்தமாயிருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்; பிறக்கின்றானென்று சொல்லிக்கொண்டே பிறப்பிலியென்கைக்குக் கருத்து யாதெனில்;- நாமெல்லாம் கருமாடியாகப் பிறப்பதுபோலேபிறவாதவன், தன்னுடைய அநுக்ரஹமே காரணமாகப் பிறப்பவனேயன்றி கருமமடியாகப் பிறவாதவன் என்கை. (அன்றியே) “எந்நின்ற யோனியுமாய்ப்பிறந்தாய் இமையோர் தலைவா” என்கிறபடியே நமக்காகப் பல பல பிறவிகளெடுத்தும் பரிச்ரமங்கள்பட்டும் நம்மிடத்துள்ள வ்யாமோஹாதிசயத்தினால் இவர்களுக்கு நாம் ஒன்றுஞ் செய்யவில்லையே, நாம் ஒரு பிறவியும் பிறக்கவில்லையே’ என்று நினைப்பவனாகையாலே அப்படிப்பட்ட அவன் கருத்தாலே பிறப்பிலியென்றதாகவுமாம்.

English Translation

The birth less Lord who took birth reclines in the ocean. Sweet as fruit and nectar, sweet as sugar and honey and our ambrosia. He is the living, the non-living and all else. Those who praise him, with Song and dance, attain total knowledge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்