விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சாது சனத்தை நலியும்*  கஞ்சனைச் சாதிப்பதற்கு,* 
  ஆதி அம் சோதி உருவை*  அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*
  வேத முதல்வனைப் பாடி*  வீதிகள் தோறும் துள்ளாதார்,* 
  ஓதி உணர்ந்தவர் முன்னா*  என் சவிப்பார் மனிசரே?       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சாது சனத்தை நலியும் - ஸாத்விகர்களைத் துன்பப்படுத்தின
கஞ்சனை - கம்ஸனை
சாதிப்பதற்கு - தண்டிக்கும்பொருட்டு
ஆதி அம்சோதி உருவை - நித்தியமாய் அப்ராக்ருததேஜோரூபமான திருவுருவை
அங்கு வைத்து இங்கு பிறந்த - பரமபதத்திலுள்ளபடியே ஸ்வீகரித்துக்கொண்டு இந்நிலத்தில் வந்து பிறந்தவனும்

விளக்க உரை

அடியார்களின் விரோதிகளைத் தொலைப்பதற்காகத் தன்னுடைய அஸாதாரண திவ்ய ரூபத்தோடு கூடவே வந்து திருவவதாரம் பண்ணின திருக்குணத்தை அநுஸந்தித்து ஈடுபடாதவர்கள் செய்கிற ஜபம் தபம் முதலியனவெல்லாம் உபயோகமற்றவையென்கிறார். எம்பெருமான் தன்னளவிலே ஆஸுரப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான்; தன்னடியவர்பக்கல் அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான்; தன்னடியவர்கள் அபசாரப்படுமளவில் அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் என்பது நூற்கொள்கை. “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச் செய்வர்” என்று ஸ்ரீவசநபூஷணத்தில் பாசுரம். அதாவது- ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னை அழியமாறி இதரஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்றுசெய்த ஹிரண்ய ராவண கம்ஸசிசுபாலாதி நிரஸநரூபமான அதிமாநுஷக்ருக்யங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹரிஷிகள் வஸுதேவதேவகிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று கநஞ்சீயர் அருளிச்செய்வாராம். இவ்வர்த்தமே இப்பாட்டில் “சாதுசனத்தைத் தலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு” என்பதனால் தெரிவிக்கப்படுகிறது.

English Translation

The Lord of the Vedas left his radiant Vaikunta and came as a mortal to protect the innocent from Kamsa;s tyranny. Other than singing and dancing his praise through every street, what is there for scholars to learn, are they men?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்