விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயவன் பின்வழி சென்று*  வழியிடை மாற்றங்கள் கேட்டு* 
    ஆயர்கள் சேரியிலும் புக்கு*  அங்குத்தை மாற்றமும் எல்லாம்*
    தாயவள் சொல்லிய சொல்லைப்*  தண் புதுவைப் பட்டன் சொன்ன* 
    தூய தமிழ் பத்தும் வல்லார்*  தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வழி இடை - போகிற வழியிலே;
மாற்றங்கள் கேட்டு - வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு;
மாயவன் பின் வழிசென்று - கண்ணபிரான் பின்னே போய்;
ஆயர்கள் சேரியிலும் புக்கு - திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்தபின்பு;
அங்குத்தை மாற்றமும் எல்லாம் - அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து;

விளக்க உரை

தனது பெண்பிள்ளையானவள் கண்ணபிரான் பின்னே புறப்பட்டு வழியிடையிலே விரோதமாகப் பேசிக்கொண்டுபோய்த் திருவாய்ப்பாடியேறப் புகுந்தபடியையும், அங்குப் புகுந்தபின்பு, யசோதைப்பிராட்டி, ஸ்ரீநந்தகோபார், மருமகப்பிள்ளையான ஸ்ரீகிருஷ்ணன், தன் பெண்பிள்ளை ஆகிய இவர்கள் தங்கள் தங்களுக்கு அதுகுணமாகச் செய்யுமவற்றையும் சொல்லுமவற்றையெல்லாம் திருந்தாயார் தன் திருமாளிகையிலேயே இருந்துகொண்டு மகோரத்தித்தும் வருந்தியும் கிட்டினாரைக்குறித்துச்சொல்லியும் போந்தபடியைக் கூறவதாகிய இத்திருமொழியை ஓதவல்லவர்கள் பகவத் கைங்கரியாமகிற செல்வத்தைப் பெறுவர் என்று- பலஞ்சொல்லித் தலைகட்டியவாறு. மற்றொருபடியாகவுங் கருத்துக் கூறுவர்; அதாவது: - திருத்தாயர் படுக்கையில் பெண்ணைக்காணாமல் கண்ணபிரான்றானிவளைக் கொண்டுபோயிருக்க வேண்டுமென்றறுதியிட்டு, அவன் போனவழியைத் தொடர்ந்துசென்று, வழியெதிர் வந்தவர்களை “மதுரைப் புறம்புக்காள்கோலோ?” என்று கேட்டும், திருவாய்ப்பாடியில் தோரணம் முதலான தெருக்கோலங்களைக் கண்டீர்களா? வாத்யகோஷங்கள் செவிப்பட்டனவா?” என்று கேட்டுக் கொண்டுபோய்த் திருவாய்ப்பாடியிற் புகுந்து அங்குள்ளவர்களை, யசோதை ஸ்ரீநந்தகோபர் செய்யும் ஆதா அநாதரங்களையெல்லாம் விசாரிக்க அவர்கள் சொன்ன விசேஷங்களைத் திருத்தாயார் கூறியவாறாக யோஜிக்கவும். இதிற்காட்டும் முந்தின யோஜனையே உசிதமாமென்க. அடிவரவு:- நல்லது ஒன்று குமரி ஒரு தம்மான் வேடர் அண்டக்குடி வெண்ணிறம் மாயவன் என்னாதன்.

English Translation

This decad of pure Tamil songs by Vishnuchitta of Puduvai, cooled by groves, recalls the words of a mother who went into the cowherd settlements asking the way,--following Krishna,--and told them of her woes. Those who master it will be servants of the gem-hued Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்