விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மலையை எடுத்து கல்மாரி*  காத்து*  பசுநிரை தன்னைத்,* 
    தொலைவு தவிர்த்த பிரானைச்*  சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
    தலையினோடு ஆதனம் தட்டத்*  தடுகுட்டமாய்ப் பறவாதார்,* 
    அலை கொள் நரகத்து அழுந்திக்*  கிடந்து உழைக்கின்ற வம்பரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலையை - கோவர்த்தன மலையை
எடுத்து - குடையாகத் தூக்கி
கல் மாரி - கல் மழையை
காத்து - தடுத்து
பசு நிரை தன்னை  - பசுக்கூட்டத்தை

விளக்க உரை

இடையர்கள் இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப்பொருள்களையும் அமைப்பதைக்கண்ட கண்ணபிரான் அவற்றை இந்திரனுக்கு இடவொட்டாது தடுத்துக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லி, பிறகு தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றையெல்லாம் தானே யமுது செய்திட, பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்று ஏழுநாள் விடாமழ பெய்வித்தபோது அம்மலையையே பிடுங்கிக் குடையாகத்தூக்கித்தாங்கி, கோகுலத்தைச்சேர்ந்த ஸகலபிராணிகளையும் அதன்கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளின பெருங்கணத்தில் ஈடுபட்டு விக்ருதராகாதவர்கள் நித்திய ஸம்ஸாரிகளா யொழிவர்களென்கிறார். அலைகொள் நரகத்து = அலை என்று நீரில் தோன்றும் அலைக்கும் துக்கத்திற்கும் பெயர். அவ்விருபொருளும் இங்குப்பொருந்தும். * கர்ப்பஜ்மஜராம்ருதிக்லேச கர்மஷடுர்மிக.* என்கிற பட்டர் ஸ்ரீஸூக்தியின்படியும் * தம் வீக்ஷ்ய ஸேது மதுநாபி சரீர வந்த. ஸர்வே ஷடூர்மி பஹுலம் ஜலதிம் தரந்தி * என்கிற தேசிக ஸ்ரீ ஸூக்தியின் படியும் இந்த ஸம்ஸாரஸாகரம் ஆறுவகையான அலைகள் நிரம்பப்பெற்றதென்றுமிடம் அறியத்தக்கது. இங்கு நரகமென்றது ப்ரத்யக்ஷநரகமாகிய ஸம்ஸாரத்தையே சொன்னபடியாகலாம். வம்பர் - புதுமை மாறாதவர்கள்; (அதாவது) நலிகின்ற யமபடர்கட்கு அப்பொழுதைக் கப்பொழுது புதியராகவே யிருப்பவர்களென்கை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “மனநாள் நலிந்தால் பிற்றை நாள் வந்து தோற்றினால் முனநாள் நாம் நலிந்தவன்’ என்று க்ருபைபண்ணாதே மோம்பழம் பெற்றாற்போலே வாரீரோ! உம்மையன்றோ தேடித்திரிகிறது’ என்னும்படியாவர்.”.

English Translation

Those who do not dance and touch the Earth with their heads, repeatedly uttering the praises of the Lord, -who stopped a hailstorm with a mountain, -must forever suffer stormy hell as their only retreat.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்