விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தண்கடல் வட்டத்து உள்ளாரைத்*  தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,* 
  திண்கழல்கால் அசுரர்க்குத்*  தீங்கு இழைக்கும் திருமாலைப்,* 
  பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,* 
  மண்கொள் உலகில் பிறப்பார்*  வல்வினை மோத மலைந்தே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தண் கடல் வட்டத்து உள்ளாரை - குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமண்டலத்திலுள்ள ஜனங்களை
தமக்கு இரை ஆ தடிந்து உண்ணும் - கொன்ற தின்கிறவர்களும்
தடிந்து உண்ணும் - கொன்று தின்கிறவர்களும்
திண் கழல் கடால் - திண்ணிய வீரக்கழல்களையணிந்த காலையுடையவருமான
அசுரர்க்கு - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு

விளக்க உரை

ஸகல ஜகத்தினுடையவும் துன்பங்களைப்போக்கிக் காத்தருளுமியல்வினனான திருமாலினது இந்நீர்மையில் ஈடுபடமாட்டாதவர்கள் ஸம்ஸார நிலத்தில் மேன்மேலும் பிறந்து படுவர்களென்கிறாரிப்பாட்டில். கடல்சூழ்ந்த மண்ணுலகிலுள்ளவர்களைக் கொன்ற தமக்கு இரையாகத் தின்றுதிரியும் ஆஸுரப்ரகருதிகளுக்கு அநர்த்தங்களை விளைக்கின்ற எம்பெருமான் விஷயமாக இசைகளைப்பாடி நெஞ்சுகனிந்து கூத்தாடிக் களிக்கபெறாதவர்கள் ஒருநாளும் கழிக்கப்போகாத கொடிய பாவங்கள் மேலிட்டுத் துன்புறுத்தும்படி மீண்டுமீண்டும் பிறந்துமிறந்தும் போருவர்களென்றாராயிற்று. அசுரர்க்கு என்றது அஸுரஜாதியிற் பிறந்தவர்களுக்கு என்றயடியன்று: பகவத்கீதையில் பதினாறாவது அத்தியாயத்தில் * த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச * என்று சொல்லப்பட்டிருப்பதுகாண்க. பகவத் பாகவத விஷயங்களில் நன்மைபுரிவாரடங்கலும் தேவப்ரக்ருதிகள் என்றும், தீமைபுரிவாரடங்கலும் ஆஸுரப்ரக்ருதிகளென்றும் கொள்ளக்கடவர்கள். தீங்கிழைக்கும் திருமாலை என்றவிடத்து, திரு என்றதுகுறிக்கொள்ளத்தக்கது; *ஸஹதர்மசரீம் சௌரேஸ் ஸம்மந்த்ரித ஜகத்திதாம், அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ் ஞாதநிக்ரஹாம் * (யதிராஜஸப்ததி) என்கிறபடியே நிக்ரஹமென்பதைக் கனவிலுமறியாத பிராட்டியுங்கூட எம்பெருமானோடு சேர்ந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றும்படி தீமைகளைச் செய்கின்றனராம் ஆஸுரப்ரக்ருதிகள். ஆஸுரப்ரக்ருதிகளை தொலைந்து தேவப்ரக்கருதிகளைக் காத்தருளுமெம்பெருமான் திறத்து ஈடுபடாதவர்கள் நித்யஸம்ஸாரிகளாய்த் தொலைந்து போவர்கள என்றதாயிற்று.

English Translation

Praising the Lord who gives woe to the mighty Asuras, -fiends who mince and eat martals on Earth, -those who cannot sing on top throat and dance in ecstacy must forever suffer the throes of Karmic birth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்