விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,* 
  கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,* 
  எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,* 
  தம்மாம் கருமம் என் சொல்லீர்*  தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தண் கடல் வட்டத்து உள்ளீர் - குளிர்ந்த கடல்சூழ்ந்த பூமண்டலத்திலுள்ளவர்களே!
மொய் - நெருங்கின
மா - பெரிய
பூ பொழில் - பூஞ்சோலைகளையுடைய
பொய்கை - தடாகத்தில்

விளக்க உரை

ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்ஸல்யத்தை யநுஸந்தித்தும் விகாரமடையாதிருப்பாருடைய பிறப்பு வீண் என்கிறார். மஹாவிஷ்ணு பக்தனான கஜேந்திரன் அர்ச்சனைக்காகப் பூப்பறிக்க ஒரு பெரிய பொய்கையிற்சென்றிழிந்ததும் அங்க முதலையின்வாயில் அகப்பட்டு வருந்தியதும், பிறகு ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியளித்ததும் ப்ரஸித்தம். கஜேந்திராழ்வான் தானியிருக்கின்றவனத்திலே நெடுநாள் மழைபொழியாமையால் தாமரைக்குளங்களெல்லாம் வறண்டமைபற்றி எங்குந்தாமரைமலர் கிடைக்கப்பெறாமல் சிலநாளாக அர்ச்சனை தவிர்ந்து அதனாலாகிய வருத்தத்தினால்உயவு கொள்ளாமல் பட்டினிகிடந்து ஏங்கி மலர்தோடுகின்றபோது தெய்விகமாக ஒரு நறுமணத்தை மோப்பஞ்செய்து அதனையே பிடித்துக்கொண்டு அதுவந்த வழியால் விரைந்து செல்லுகையில் ஒருமலையின்மீது திவ்யமான ஒரு சோலையையும் அதன் நடுவே ரமணீயமான ஒரு தடாகத்தையும் கண்டு அதில் நிறைந்திருக்கின்ற தாமரை மலர்களைப் பார்த்ததனால் மிகமகிழ்ந்து அவற்றினிடத்திற்கொண்ட ஆதராதிசயத்தினால் அம்மடுவின் முதலையிருப்பதைப்பாராமலே விரைந்திறங்கி மலர் கொய்வதாயிற்றென்பது விளங்க “மொய்ம்மாம்பூம் பொழிற்பொய்கை முதலைச்சிறைபட்டு நின்றகைம்மா” என்றார்.

English Translation

Pray tell, O People of the ocean-girdled Earth! What good are they who cannot sing and dance in joy, the glories of the dark hued Lord who saved the elephant from the jaws of the crocodile in the lotus tank?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்