விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணனை மாயன் தன்னை*  கடல் கடைந்து அமுதம் கொண்ட,* 
  அண்ணலை அச்சுதனை*  அனந்தனை அனந்தன் தன்மேல்,* 
  நண்ணி நன்கு உறைகின்றானை*  ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,* 
  எண்ணும் ஆறு அறியமாட்டேன்,*  யாவையும் எவரும் தானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாயன் தன்னை ஆச்சரியமான குணஞ்செயல்களையுடையவனும்
கடல் கடைந்து பாற்கலைக் கடைந்து
அமுதம் கொண்ட அமிருதத்தையெடுத்து (தேவர்கட்குக்) கொடுத்த
அண்ணலை பெருமையையுடையவனும்
அச்சுதனை (தன்னையடைந்தவரை) ஒருபோதும் நழுவவிடாதவனும்

விளக்க உரை

எம்பெருமானுடைய விபூதிகளைத் தனித்தனியே சொல்லிமுடித்தல் முடியாத காரியம்; சுருக்கமாகச் சொல்லில், சேதநப் பொருள்களும் அசேதநப் பொருள்களுமாகிய எல்லாமும் அவனுடைய விபூதிகளேயாம்- என்கிறது இப்பாசுரம். பகவத்கீதையில் தனது விபூதிகளை அர்ஜுநனுக்குப் பரக்கச் சொல்லிவந்த ஸ்ரீகிருஷ்ணபகவான் *நாஸ்தி அந்தோ விஸ்தரஸ்ய மே* (எனது விபூதிகளின் பரப்புக்கு ஓரெல்லையில்லை) என்று கூறியதுபோல, இவ்வாழ்வாரும் கீழே எம்பெருமானது விபூதிகளிற் சிலவற்றைக் கூறிவந்து “எண்ணுமாறு அறியமாட்டேன்” என்று இங்குக் கூறுகின்றனரென்க. “கடல்கடைந்து அமுதங்கொண்ட அண்ணல்” என்றதனால் தனது திருவடிகளை விரும்பியடைந்தார்க்கு அன்றி வேறுபயனை வேண்டினார்க்கும் தன்னுடம்பு நோவவும் அவர்கள் வேண்டியபடி நன்மை புரிபவன் எம்பெருமான்- என்பது பெறப்படும். நன்கு உறைகின்றானை = நாச்சிமாராலும் எழுப்பவொண்ணாதபடி கண்வளர்ந்தருளுகிறவனை என்றுரைப்பர். அண்ணல்- பெருமை; அதனையுடையவன்; ஆண்பாற் சிறப்புப்பெயர். அனந்தன் என்ற திருநாமம் எம்பெருமானுக்கு வழங்குதல் போலவே ஆதிசேஷனுக்கும் வழங்கும். எம்பெருமானை அனந்தனென்றற்குக் காரணம் இப்பதிகத்தின் அவதாரிகையில் விரித்துரைக்கப்பட்டது காண்க. ஆதிசேஷனை அனந்தனென்பது அடிமைத்தன்மையில் எல்லை நிலையிலிருப்பவன் (எம்பெருமானுக்கு அடிமை செய்வதில் யாவரினும் விஞ்சி நிற்பவன்) என்பது பற்றியென்க. யாவையும் என்றதனால் அசேதனப் பொருள்களையும் யவரும் என்றதனால் சேதனைப் பொருள்களையும் குறித்தார். உம்மைகள்- முற்றுப்பொருளன. விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிடத்திலும் வேற்றுமையுருபை விரிப்பது வடமொழி நடை.

English Translation

My Lord is in all things and all beings, and he is beyond understanding. He is Krishna, Lord who swallowed all and remade all in sport. He churned ambrosia from the ocean and gave it to the gods. He is Achyuta, Ananta, Govinda, reclining on a serpent couch.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்