விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒளி மணி வண்ணன் என்கோ!*  ஒருவன் என்று ஏத்த நின்ற* 
  நளிர் மதிச் சடையன் என்கோ!*  நான்முகக் கடவுள் என்கோ,*
  அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்*  படைத்து அவை ஏத்த நின்ற,* 
  களி மலர்த் துளவன் எம்மான்*  கண்ணனை மாயனையே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒளி மணி வண்ணனை -  பிரகாசமுள்ள மாணிக்கம் போன்ற வடிவையுடைய பெருமானை
வானவர் ஆதி என்கோ - நித்யஸூரிகட்குத் தலைவன் என்பேனோ?
வானவர் தெய்வம் என்கோ - அந்த நித்யஸூரிகளால் கதியென்றுபற்றப்படும் தெய்வமென்பேனோ?
வானவர் போகம் என்கோ - அந்த நித்யஸூரிகளால் அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பேனோ?
வானவர் - அந்த வானவர்கட்கு

விளக்க உரை

உரை:1

எம்பெருமான் ஐச்வரியம் முதலிய புருஷார்த்தங்களையுடையவனென்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார். “வானவர் தெய்வம், வானவர் போகம், வானவர் முற்றும்” என்று வருவதனால் ‘வானவராதி’ என்பதற்கு- கீழ்ச்செய்யுளிற்போல ப்ரஹ்மாதி தேவர்கட்குத் தலைவன் என்று பொருள்கொள்ளாது நித்யஸூரிகட்குத் தலைவன் என்று பொருள் உரைக்கப்பட்டது. எம்பெருமான் ப்ரஹ்மாதி தேவர்களைப் படைத்தல் முதலியன செய்வதன்றி “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றபடி உல்லாமுமாக இருப்பது நித்யஸூரிகட்கேயென்க. வானவர் போக மென்கோ என்பதற்கு அவ்வானவர்கட்கு ஆராதனையினாலுண்டாகிய பயனான பேரின்பம் என்பேனோ? என்றும், வானவர் முற்றுமென்கோ என்பதற்கு- அவ்வானவர்கட்கு ஸகலவகையான ரக்ஷணமும் என்பேனோ? என்றும் உரைக்கலாம். ஊனமுல் செல்வம்- சிலநாள் நின்று வற்றுவதல்லாமல் எந்நாளும் அழியாத ஸம்பத்து. ஊனமில் சுவர்க்கம்- சிலநாளிருந்து புண்ணியப்பயனொழிந்தபிறகு தள்ளும்படியானதல்லாமல் கல்பகாலம்வரையில் அழிவின்றி வாழும் சுவர்க்கம். ஆத்மாவையநுபவித்தல் மாத்திரத்தையுடைய கைவல்யமென்னும் மோக்ஷத்தினும் வேறுபாடு விளங்க, பரமாத்மாவான எம்பெருமானை யநுபவித்தலையுடைய பரமபுருஷார்த்தமாகிற மோக்ஷத்தை ‘ஊனமில் போக்கம்’ என்றார்.

உரை:2

ஒளிவீசும் கரு மாணிக்கம் போல் நிறம் கொண்ட திருமால் என்பேனோ? ஒரே இறைவன் என்று உலகத்தவர் எல்லாம் போற்றிப் புகழ நின்ற அமுதம் நிரம்பிய மதியைச் சடையில் வைத்திருக்கும் சிவபெருமான் என்பேனோ? நான்முகக் கடவுளான பிரம்மன் என்பேனோ? உலகத்தை எல்லாம் படைத்து எல்லா உலகங்களும் போற்ற நின்ற திருத்துழாயாம் துளசி மாலை அணிந்த என் இறைவன் கண்ணனை மாயனையே! கண்ணனை மாயனை ஒளி மணிவண்ணன், நளிர்மதிச் சடையன், நான்முகக் கடவுள் என்றவர் கீழே சொல்லபப்டும் பாடலில் மூவரையும் போற்றுங்கள் என்கிறார்.

English Translation

Shall I call him my gem-hued radiant Lord?, the Lord of celestials or their ecstaic enjoyments?, or their ends?. or endless wealth?, or the eternal heavens?, or timeless liberation?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்