விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பால் என்கோ!*  நான்கு வேதப் பயன் என்கோ,*  சமய நீதி 
    நூல் என்கோ!*  நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
    மேல் என்கோ,*  வினையின் மிக்க பயன் என்கோ,*  கண்ணன் என்கோ!- 
    மால் என்கோ! மாயன் என்கோ*  வானவர் ஆதியையே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் ஆதியை - தேவாதி தேவனான எம்பெருமானை
பால் என்கோ - பால் என்பேனோ?
பயன் நான்கு வேதம் என்கோ - (பிரமாணங்களுக்குள்) சிறந்ததான நால்வேதங்களென்பேனோ?
சமயம் - வைதிக மதத்தைத் தெரிவிக்கின்ற
நீதி - முறைமையையுடைய

விளக்க உரை

வேதம் முதலியனவான இயலும் இசையுமாயுள்ள சப்தராசிகளை எம்பெருமான் தனக்கு விசேஷணமாகப் பெற்றிருக்கின்றபடியைக் கூறுகின்றாரிப்பாட்டில். வேதம் முதலிய தன்னையுணர்த்த, தான் அவற்றால் உணரப்படுபவனாதலால் எம்பெருமானுக்கு வேதம் முதலியன விசேஷணமாகும். கீழப்பாசுரத்திற் கூறி எம்பெருமானது இனிமை பின்னும் தோன்றியதனால் பாலென்கோ என்றார். “கண்ணனென்கோ” என்பதுமுதல் எம்பெருமானது தானான தன்மையையுணர்த்தும். “நான்கு வேதப் பயனென்கோ” என்பதை ‘பயன் நான்கு வேதமென்கோ’ என்று கூட்டிப் பொருள்கொள்ள வேணுமென்று ஆசிரியர்களின் கொள்கை; வேதம் முழுவதும் எம்பெருமானது ஆராதனத்தின் தன்மையையும், ஆராதிக்கப்படுகின்ற அந்த எம்பெருமானது தன்மையையுமே உணர்த்துவதாகி வேறொன்றையுணர்த்தாமையால், வேதத்தின் பயன் (ஸாராமன பொருள்) எம்பெருமான்- என்று கூறுதற்கு இடமில்லை; ஆகையால், பயனாகிய நான்கு வேதம் என்று கூட்டி, பிராமணங்களுக்குள் சிறந்ததான நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் என்று பொருள் கொள்வது உசிதம்; இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்.

English Translation

Shall I call my Krishna, Lord of celestials or wonder-Lord?, or milk or the substance of the Vedas-tour?, or the truth of the scriptures? or music of the upanishads?, or the fruit of great Karmas?, or more than any of these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்