விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அச்சுதன் அமலன் என்கோ,*  அடியவர் வினை கெடுக்கும்,* 
  நச்சும் மா மருந்தம் என்கோ!*  நலங் கடல் அமுதம் என்கோ,*
  அச்சுவைக் கட்டி என்கோ!*  அறுசுவை அடிசில் என்கோ,*
  நெய்ச் சுவைத் தேறல் என்கோ!*  கனி என்கோ! பால் என்கேனோ!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அச்சுதன் - (எம்பெருமானை) அச்சுதன் என்பேனோ?
அமலன் என்கோ - அகிலஹேய ப்ரத்யநீகன் என்பேனோ?
அடியவர் - தன்னடியார்களது
வினை - புண்ணியபாபமென்கிற இருவினைகளையும்
கெடுக்கும் - போக்குவதும்

விளக்க உரை

எம்பெருமான் ரஸம் நிறைந்த பண்டங்களாக இருக்குந்தன்மையை ஆழ்வார் இப்பாட்டில் பாராட்டிக் கூறுகின்றார். “ரஸோவை ஸ: ரஸம்ஹ்யேவாயம் லப்த்வாநந்தீபவதி” என்ற உபநிஷத்து இங்கு ஸ்மரிக்கத்தக்கது. புண்ணியமும் பாவமும் பிறப்பிற்கே ஹேதுவாகி உயிரைப் பந்தப்படுத்துவதில் பொன்விலங்கும் இரும்பு விலங்கும் போலத் தம்முள் ஒத்திருக்கின்றமையால் அவ்விருவகைவினையும் அடங்க “வினைகெடுக்கும்” என்று பொதுப்படக் கூறினார். எம்பெருமான் பரமபதத்தில் இருந்தானேயாகிலும் அடியவர் இடர்ப்பாட்டமாத்திரத்தில் அரைகுலையத் தலைகுலைய ஆனைக்கு அருள்செய்தாப்போல ஓடிவந்து அவர்கள் துன்பத்தைப் போக்குவானென்ற கருத்தும் அடியவர் வினை கெடுக்கும் என்ற விடத்தில் தோன்றும்.உடற்பிணியைத் தீர்க்கும் மருந்தினும் உயிர்ப்பிணியாகிய வினையைத் தீர்க்கும் வேறுபாடு விளங்க ‘வினைகொடுக்கும் மருந்தகம்’ என்றார். கைப்பு முதலிய அருளியையுடைய மருந்திலும் வேறுபாடு விளங்க ‘நச்சுமருந்தம்’ என்றார். மாமருந்தம் என்றது- காற்றுப்பட்ட மாத்திரத்தில் நோய்தீர்க்கவல்லதாய், ஏகமூலிகையாய், ஒருமுறையில்தானே பிணியைப் போக்கவல்லதாய், அபத்தியஞ்செய்தாலும் தீமையை உண்டாக்காததான மஹௌஷதம் என்றபடி. எம்பெருமான் பரம்பரையாகத் தன்னடியாரார்கள் முதலியோர்க்கு அடியவரனாரையும் பாதுகாத்தலும், தன்னையடைந்தார் எதைவேண்டினாலும் தானேயளிப்பவனாதலும், தன்னை ஒருகால் சரணமடைந்தார்க்கும் அபயமளிப்பவனாதலும், தன்னடியவர் அபுத்தி பூர்வமாகச்செய்யும் பாவங்களையெல்லாம் க்ஷமிப்பவனாதலும் காண்க. மாமருத்தம் என்றவிடத்திற்கு வியாக்கியான மருளிச் செய்யுமிடத்து. உலகின் வியாதிகளுக்கெல்லாம் மேல்காற்றுப் பட்டால் அபிவ்ருத்தியாகுமென்பர். அதற்கு எதிர்த்தட்டாயிருக்கும் இந்த மாமருந்து என்ற கருத்தும் உணரத்தக்கது.

English Translation

Shall I call him my blameless Achyuta, Great Lord?, or the ocean ambrosia, medicine for devotees ills?, or a candy sweet as, that, or the food of six tastes? or sweet, or honey, or butter, or fruit, or milk?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்