விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெண்ணிறத் தோய் தயிர் தன்னை*  வெள்வரைப்பின் முன் எழுந்து* 
    கண் உறங்காதே இருந்து*  கடையவும் தான்வல்லள் கொல்லோ?* 
    ஒண்ணிறத் தாமரைச் செங்கண்*  உலகளந்தான் என்மகளைப்* 
    பண் அறையாப் பணிகொண்டு*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மகள்தான் - என் மகளானவள்;
வெளிவரைப் பின் முன் எழுந்து - கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து;
கண் உறங்காதே இருந்து - கண் விழித்துக்கொண்டிருந்து;
வென் நிறம் தோய் தயிர்தன்னை - வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை;
கடையவும் வல்லன் கொல் ஓ - கடையும்படியான சக்தியைத்தான் உடையவனோ?;

விளக்க உரை

கண்ணபிரான் என் மகளைக் கொண்டுபோய்த் தயிர்கடையகையாகிற தொழிலில் நியமித்துவிட்டானாகில், என்மகள் கிழக்கு வெளுப்பதற்கு முன் உறக்கத்தை ஒழித்து எழுந்து தயிர் கடைவதற்கு எங்ஙனே வல்லளாவள்? என்று சொல்லிச் சற்றுப்போது மூர்ச்சித்துக்கிடந்து, பின்பு தெளிந்து எல்லாரையுங் குளிரச் சேர்க்கும்படியுள்ள கண்கள் படைத்தவனும், வஸிஷ்டனோடு சண்டாள ரோடுவாகியற அனைவரையும் தன் திருவடிக் கீழாக்கிக் கொண்டவனுமான கண்ணபிரான் என்மகளை அதர்மமாக இழிதொழில்களில் ஏவி, அவளது பெருமைகளைக் குலைப்பனோ? அன்றி, பெருமைக்குத்தக்கவாறு திருவுள்ளம் பற்றுவனோ? என்று ஸந்தேஹிக்கிறாள்- கண்ணபிரான் திருமாளிகையில் கறவைக் கணங்கள் பலவகையால் அவை அளவற்ற பாலைத்தரும், பின்பு அதைத் தோய்த்துத் தயிராக்கிக் கடைவதற்குப் பின்மாலைப் பொழுதிலேயே எழுந்திருக்க வேணுமென்க. பண்- அமைவு, சீர்,செவ்வை, தகுதி அறை- குறைவு ஆ-ஆக என்பதன் விகாரம். (மகளானவள்,)

English Translation

Would my daughter be able to wake up before dawn and churn the fresh white curds without falling asleep? O will the red eyed Earth-measuring Lord make her do menial work and rule her insultingly? O Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்