விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சாதி மாணிக்கம் என்கோ!*  சவி கொள் பொன் முத்தம் என்கோ*
  சாதி நல் வயிரம் என்கோ,*  தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*
  ஆதி அம் சோதி என்கோ!*  ஆதி அம் புருடன் என்கோ,* 
  ஆதும் இல் காலத்து எந்தை*  அச்சுதன் அமலனையே!    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆதும் இல் காலத்து - (என்னிடத்து) யாதொரு உபாயமுமில்லாத காலத்திலே
எந்தை - என் தந்தையைப்போலப் பாதுகாக்க ஒருப்பட்டவனும்
அச்சுதன் - (பின்பு ஒருகாலும் என்னை அந்த நிலையினின்று) நழுவ விடாதவனும்
அமலனை - (அங்ஙனம் பாதகாத்தலைத்) தன் பேறாகக் கொள்பவனுமான எம்பெருமானை

விளக்க உரை

ஒருவன் எம்பெருமானை நினைப்பதற்கு எனக்கு ஒருபாயம் சொல்ல வேணும் என்று ஒரு பெரியோரைக் கேட்க, அதற்கு அவர் ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன். நீ எனக்கு அவனை மறப்பதற்கு ஒருபாயம் சொல்லவல்லையோ?’ என்றாராம். அதற்குக் கருத்து - உலகத்துப் பொருள்கள் யாவும் பெயரையும் உருவத்தையும் பெற்று வழங்கப்பெறுவது எம்பெருமான் அவ்வப்பொருளில் பிரவேசித்து நிற்பதனாலேயாதலால், ஏதேனும் ஒரு பதார்த்தம் தோற்றும்போதும் ஞானிகட்கு அவனை முன்னிட்டுக்கொண்டே தோற்றுமென்பது. இவ்வாறு எல்லாப் பொருள்களும் எம்பெருமானது ஸம்பந்தத்தைப் பெற்றிருந்தாலும் *யத் யத் விபூதி மத்..* (உலகத்திலே சிறந்து தோன்றும் பொருள்கள் யாவும் எனது தேஜஸ்ஸின் அம்சத்தினாலுண்டானவை) என்று கீதையில் கண்ணபிரான் பாராட்டிக் கூறியித்தலால் சிறந்த மாணிக்கம் முதலியவைகளில் அவ்வெம்பெருமானது அம்சம் மிக்கிருக்குமென்பது கருதி ஆழ்வார் இந்தப்பாசுரத்தில் எம்பெருமானை மாணிக்கம் முதலிய சிறந்த பொருள்களாகப் பாராட்டி யநுபவிக்கின்றனரென்க. ஆதியஞ்சோதி யென்பது முதல் எம்பெருமானை நேரே சொல்லுகின்றது.

English Translation

My faultless Lord was there, when all else was naught, Shall I call him my flawless gem, or dazzling gold and pearls? or a brilliant diamond? or a lamp of eternal glory?, or radiant first-cause, the good first-person?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்