விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பங்கயக் கண்ணன் என்கோ!*  பவளச் செவ்வாயன் என்கோ,*
  அம் கதிர் அடியன் என்கோ!*  அஞ்சன வண்ணன் என்கோ,*
  செங்கதிர் முடியன் என்கோ!*  திரு மறு மார்பன் என்கோ,*
  சங்கு சக்கரத்தன் என்கோ!*  சாதி மாணிக்கத்தையே!      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சாதி மாணிக்கத்தை - நல்ல ஜாதியான (ஆகரத்தில் தோன்றிய) கருமாணிக்கம் போல விளங்குனின்ற திருமேனியையுடைய திருமாலை
பங்கயக் கண்ணன் என்கோ - செந்தாமரைக் கண்ணனென்பேனோ?
பவளச் செவ்வாயன் என் கோ - பவளம்போல சிவந்த வாயை யுடையவன் என்பேனோ?
அம் கதிர் அடியன் என்கோ - அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளை யுடையவனென்பேனோ?

விளக்க உரை

எம்பெருமான் ப்ரபஞ்ச சரீரகனாயிருக்கும்படியை முதலிரண்டு பாசுரங்களிற் கூறிய ஆழ்வார், இந்தப் பாசரத்தில் தனக்கு உரிய திருமேனியோடு ஸேவை ஸாதிக்கின்ற அப்பெருமானை அநுபவிக்கிறார். இவ்வாறு அநுபவித்துக் கூறியதற்குக் காரணம் - எம்பெருமான் ஜகத்தை சரீரமாகக்கொண்டு நிற்கும் நிலையும் தனக்கு உரிய திருமேனியைக் கைக்கொண்டு நிற்கும் நிலையும், ஆக இவ்விரண்டும் ஆழ்வார்க்கு ஒத்திருக்கையாலென்க. ஆழ்வார், தம்மை கடாக்ஷித்துத் தம்மோடு முதலுறவு பண்ணின திருகண்களின் அழகிலீடுபட்டு முதலில் “பங்கயக் கண்ணன்” என்றார். அந்தக் கண்ணோக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத புன்முறுவலையுடைய வாயழகில் பட்டுப் ‘பவளச்செவ்வாயன்’ என்றார். அந்த நோக்கத்திலும் புன்சிரிப்பிலும் ஈடுபட்டவர் தோற்றுவிழும் நிலமாகிய திருவடிகளிலீடுபட்டு “அங்கதிரடியன்” என்றார். அத்திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகிலீடுபட்டு “அஞ்வனவன்ணன்” என்றார். அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகையுடையவன் ஈடும் எடுப்புமில்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியினழகிலீடுபட்டுச் “செங்கதிர் முடியன்” என்றார். திருமுடியினால் விளங்குகின்ற ஸ்வாமித்வத்தைக் கண்டு “இப்பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது!’ என்று கருதிப் பின் வாங்காதபடி எப்போதும் அப்பெருமானது திருமார்பிலேயிருந்து புருஷகாரஞ்செய்யும் தாயான பிராட்டியின் ஸம்பந்தத்தைக் கருதித் “திருமறுமார்வன்” என்றார். பெருமாளம் பிராட்டியுமான இச்சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோவென்ற பொங்கும் பரிவினால் பாபசங்கை கொள்ளுகின்ற அடியார்களுடைய அச்சத்தைத் தவிர்ப்பனவான திவ்யாயுதங்களைக் கருதி ‘சங்கு சக்கரத்தன்’ என்றார்.

English Translation

Or shall I call him flawless Gem-Lord of lotus eyes? Or coral lips?, or Lord with radiant feet? or dark hued Lord of red radiant clown? or bearer of discus and conch?, or the one with Lakshmi-mole on his chest?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்