விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,* 
  திகழும் தண் பரவை என்கோ!*  தீ என்கோ! வாயு என்கோ,*
  நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள் சுடர் இரண்டும் என்கோ,* 
  இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவும் ஆறே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புகழும் - (வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற
நல் - விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய
ஒருவன் - ஒப்பற்றவன்
என்கோ - என்று சொல்வேனோ?
பொருவு இல் சீர் - ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய

விளக்க உரை

எம்பெருமான் ப்ரபஞ்சஸ்ருஷ்டிக்குக் காரணமான பஞ்சமஹாபூதங்களையும்-, அந்த பூதங்களினால் இயன்ற பொருள்களையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு விலக்ஷணமான குணங்களோடு ஆழ்வார்க்கு ஸேவைதந்தருளியதனால், அத்தகைய நிலைமையை ஸேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை இப்படிப்பட்ட தன்மையுடையவனென்று கூறுதற்கு இயலாமல் திகைத்து நிற்கின்றார். “கண்ணனைக் கூவுமாயே” என்ற முடிக்குஞ்சொல் இன்றி விட்டிருக்கிறார்; அதனை வருவித்து உரைத்துக்கொள்க. விதமென்றபொருளையுணர்த்துகின்ற ஆறு என்ற சொல்வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாது எஞ்சிநிற்பதை இலக்கியங்களிற் காணலாம்: இது இசையெச்சம். புகழும் நல்லொருவன் = வேதம் முதலியவற்றால் புகழப்பெற்றும், சேதநாசேதனங்களைக் காட்டிலும் பரமவிலக்ஷணனாகியும் தோன்றும் ஒப்பற்ற எம்பெருமான் என்றபடி. என்கோ என்பதை என்கு ஒ என்று பிரிக்க. ‘என்’ என்னும் பகுதி யினடியாப்பிறந்த தன்மையொருமை எதிர்கால வினைமுற்று ‘என்கு’ என்பது. இதில் ‘கு’ விகுதி காலத்தையும் இடத்தையும் காட்டும். (நன்னூல் பதவியலில் பதினெட்டாவது சூத்திரமும் வினையியலில் பன்னிரண்டாவது சூத்திரமும் காண்க). என்கோ என்பவற்றிலுள்ள ஓகாரங்கள் ஸந்தேகப் பொருளில் வந்தவை.

English Translation

O, How shall I address my Krishna, -as one worthy of worship? As peerless good Earth, or as the wide cool ocean? Or as Fire, or wind or expansive Space? Or as the Sun, the Moon or the Universe pervading all?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்