விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேம் கடங்கள்*  மெய்மேல் வினை முற்றவும்,* 
  தாங்கள் தங்கட்கு*  நல்லனவே செய்வார்,*
  வேங்கடத்து உறைவார்க்கு*  நம என்னல்- 
  ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேங்கடத்து - திருமலையிலே
உறைவார்க்கு - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு
நம எனல் ஆம் கடமை அது - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை
சுமந்தார்கட்கு - வஹிக்கின்றவர்களுக்கு
கடங்கள் - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும்

விளக்க உரை

இப்பதிகத்தில் முதற்பாட்டில் முதற்பாட்டில் கைங்கர்யம் ப்ரஸ்தாவிக்கப்பட்டது; (அதன்மேல் நான்கு பாசுரங்கள் ப்ராஸங்கிகங்கள்.) முதற்பாட்டோடு இப்பாட்டிற்கு ஸங்கரி கொள்ளலாம். பிரதிபந்தகங்களான கருமங்கள் பலகிடக்க அடிமை செய்வது எங்ஙனே ஸாத்யம்? என்று சங்கைபிறக்க, அடிமை செய்வோமென்று இசையவே அவைதானே தொலையுமென்கிறாரிப்பாட்டில். கடம்- கடன்: மகரனகரப்பொலி, கடன்கள் வேம் = பிராமணன் பிறக்கும்போதே மூன்றுவகையான கடன்களோடு பிறக்கிறானென்று வேதம் ஓதுகின்றது. யஜுர்வேதத்தில் ஆறாவது காண்டத்தில் மூன்றாவது ப்ரச்கத்தில்- *ஜாயமாதோஹவை* என்று தொடங்கி, அந்தணன் பிறக்கும்போதே மூன்று கடன்களோடு பிறப்பதாக ஓதியுள்ளது. ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ரஷிகளின் கடனையும் யஜ்ஞங்களால் தேவர்களின் கடனையும், ஸந்தான ஸமுத்பாதநத்தினால் பித்ருக்களின் கடனையும் தீர்ப்பதென்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இம்மூவகைக் கடன்களையும் தீர்க்காமல் மோக்ஷத்தின் ருசிவைத்தால் அது கிடைக்காதென்றும் நரகமே பலிக்குமென்றும் மநு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளது; *ருணாநி த்ரீண்யபாக்குரத்ய மதோ மோக்ஷேநிவேசயேத், அநபாக்ருத்ய, மோக்ஷம் துஸேவமாதோ வ்ரஜத்யதா* என்பது மநு மஹிர்ஷியின் வசனம், இதன் பொருள்:- மூன்று கடன்களையும் தீர்த்துவிட்டு, பிறகு மனத்தை மோக்ஷத்தில் ஊன்றவைக்க வேணும், கடன்களைத் தீர்க்காமல், மோக்ஷத்தை விரும்பினாலோ அதோகதியையே அடைந்திடுவான்- என்பதாம். வேங்கடத்துறைவாற்கு நம என்று சொல்லிவிட்டால் அம்மூன்று கடன்களும் தீர்க்கப்பட்டனவாகவே ஆய்விடும் என்கிறார்.

English Translation

Those who serve him even by lip alone are rid of past Karmas and relieved of future ones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்