விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடியிற் பிறந்தவர் செய்யும்*  குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!* 
    நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!*  நந்தகோபன் மகன் கண்ணன்* 
    இடை இருபாலும் வணங்க*  இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்* 
    கடைகயிறே பற்றி வாங்கிக்*  கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நங்காய் - பூரணையாயிருப்பவளே;
நந்தகோபான மகன் - நந்தகோபருடைய பிள்ளையாகிய;
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் - உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குலமர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில்;
ஒன்றும் - ஒருவகைக்குணத்தையும்;
செய்திலன் - செய்தானில்லை;

விளக்க உரை

திருத்தாயார், தன் மனவருத்தத்தை அண்டை வீட்டிலுள்ள ஒரு ஸ்திரீயிடத்துச் சொல்லுகிறதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம். நற்குடியிற் பிறந்தவர்கள், பெண்களை முறையிலே வரைந்துகொண்டு வெளியிற் கொண்டு போவதில்லை என்றொரு ஸம்பரதாயமுண்டு; அங்ஙனஞ்செய்திலன் இக்கண்ணபிரான்; இது செய்யாதொழியிலுமொழிக; உலகத்தில் ஸாமாந்யஜனங்கள் செய்து போருகிற ரதிகள் சில உண்டே, அவையுஞ் செய்திலன்; (அதாவது- இங்ஙனே பிறர்பெண்ணைக் கனவுவழியிற் கொள்வதையோ ஸாமாந்யருந்தான் செய்கின்றனர்? அதுவுமன்றி, தன்வீட்டுக்குக் கொண்டுபோனதும் போகாததுமாயிருக்க, இவளைத் தயிர்கடையவோ நியமிப்பது? இவ்வாறு எந்த நாட்டில் நடக்கும்? என்றபட.) இளம் பருவத்தளான என் மகள் இடம்வலங்கொண்டு தயிர்கடைய வேண்டுகையால் இடைதுவண்டு உடலிணைத்துப் பெருமூச்சுவிட்டு இவ்வகை வருந்தங்களோடு, தொடங்கின காரியம் தலைகாட்டுமளவும் இடைவிடாமல் கடைகயிற்றையே பிடித்து வலித்திழுத்தால் அவளுடைய தளிர்போன்ற தடக்கைகள் தழும்பேறாப்பெறாதோ! என வருந்தியவாறு; ????? என்னும் வடசொல் மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால் தெரிகின்றதனால், அதன் திரிபாகிய அதோ என்பதுஇங்கு இரக்கப் பொருளில் வந்த்தென்க. கடைகயிறு-வினைத்தொகை வாங்கி-வாங்குவதனால் காரணப்பொருட் செயவெனச்சமாகிய என்றதன் திரிபு. தழும்பேறுதல்,- நாய்ப்புக்காய்த்தல், இதனை வடநூலார், கிணம் என்பர்.

English Translation

O Ladies, Nandagopala’s son Krishna has done nothing worthy or befitting his family prestige, nor followed the practices of the world. Will my daughter grip the churning rope and churn, bending her waist right and left,-- tired and exhausted,--through moans, till her hands swell? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்