விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சோதி ஆகி*  எல்லா உலகும் தொழும்,* 
    ஆதிமூர்த்தி என்றால்*  அளவு ஆகுமோ?,*
    வேதியர்*  முழு வேதத்து அமுதத்தை,* 
    தீது இல் சீர்த்*  திருவேங்கடத்தானையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆதி - ஸகலஜகத்காரணபூதனான
மூர்த்தி - ஸர்வேச்வரன் (இவன்)
என்றால் - என்று நான் சொன்னால் (அது)
அளவு ஆகுமோ - ஒரு பெருமை யாகுமோ?

விளக்க உரை

நீசனான எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு நித்யஸூரி நிர்வாஹகத்வம் ஒரேற்றமோ வென்றார் கீழ்ப்பாட்டில்; என்னினும் தாழ்ந்தவர்களைத் தேடிப் பெற மாட்டாதேயிருக்கிறவனுக்கு, எனக்குத் தன்னைத் தந்தானென்கிற விதுதான் ஓர் ஏற்றமோவென்கிறாரிப்பாட்டில் “எல்லாவுலகுந் தொழும் ஆதிமூர்ததி” என்று இவர் கீழே சொல்லியிருந்தாலன்றோ இப்போது * எல்லாவுலகுந் தொழுமாதிமூர்த்தி யென்றாலளவாகுமோ?* என்று சொல்லலாம்; கீழ்ப்பாட்டில் அப்படியொன்றுஞ் சொல்லியிருக்கவில்லையே; மூன்றாம்பாட்டில் “வானவரீசனே” என்று சொல்லியிருந்ததனால் நான்காம் பாட்டில் “ஈசன்வானவர்க்கென்ப னென்றால் அதுதேசமோ?” என்று சொன்னது பொருந்திற்று; இங்கு அங்ஙனம் பொருத்தமில்லையே! என்கிற சங்கைக்கு நம்பிள்ளை அருளிச்செய்கிற பரிஹாரத்தின் அழகைக் காண்மின்:- “கீழே *நீசனென் நிறைவொன்றுமிலேன் என்றாரே தம்மை:- தாழ்வுக்குத் தம்மை எல்லாரிலுமவ் வருகாகச் சொன்னாரே; தாம் தொழுதபோதே எல்லா லோகங்களும் விழுக்காட்டாலே தொழுததாயிற்று. ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், கீழ்ப்படி அமிழ்ந்தது என்று சொல்லவேண்டாவிறே” என்பவை ஈட்டு ஸ்ரீஸூக்திகள். இதனால் தேறினது என்னவென்றால், “நீசனென் நிறைவொன்றுமிலேன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே” என்று கீழ்ப்பாட்டில் கூறியதில்* எல்லாவுலகுத் தொழுமென்கிற அர்த்தம் ஸித்தமாகவேயுள்ளது என்று காட்டினபடி. ஒரு காலைசாலையில் மிகவும் மூடனான வொருவன் பரீக்ஷை தேறிவிட்டானென்றால் மற்றையோர்கள் தேறினாரீகளென்பது எப்படி ஸித்தமோ அப்படியே ஆழ்வார்தாம் தொழுதமை சொன்னவளவில் எல்லாவுலகும் தொழுதமை சொன்னபடியே யாகுமென்க. என் கண் பாசம் வைத்தது ஒரேற்றமோ? என்றபடியாயிற்று முன்னடிகளால்.

English Translation

The glorious Venkatam Lord is the nectar of the Vedas, fitst-cause of all. Can he be praised?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்