விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஈசன் வானவர்க்கு*  என்பன் என்றால்,*  அது 
  தேசமோ*  திருவேங்கடத்தானுக்கு?,* 
  நீசனேன்*  நிறைவு ஒன்றும் இலேன்,*  என்கண் 
  பாசம் வைத்த*  பரம் சுடர்ச் சோதிக்கே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வானவர்க்கு - நித்யஸூரிகளுக்கு
ஈசன்- தலைவன்
என்பன்- என்று சொல்லுவேன்
என்றால் -இப்படிச் சொன்னால்
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண் - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில்

விளக்க உரை

“எண்ணில் தொல்புகழ்வானவரீசன்” என்றார் கீழ்ப்பாட்டில்; அதனால் நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தானென்பதை ஒரேற்றமாக அருளிச் செய்தார்; மிகவும் நீசனான என் பக்கலிலே பாசம் வைத்திருக்குமப் பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறாரிப்பாட்டில். ‘வானவர்க்கு ஈசன்’ என்று சொல்லுகிறது திருவேங்கடத்தானுக்குத் தேசமோவென்கிறார். *கானமும் வானரமும் வேடுமானவிவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறவன் நித்யஸூரிகட்கு முகங்கொடுக்கிறானென்பது எங்ஙனே ஏற்றமாகும்? * அயர்வறு மமரர்களதிபதி யென்கை ஸ்ரீவைகுண்டநாதனுக்கு ஏற்ற மாகுமத்தனையல்லது திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாகாது காணும். அஃது ஏற்றமன்றாகில், பின்னை எதைத் திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைக்கின்றீர்? என்ன; அதற்கு விடையளிக்கின்றார்போலும் பின்னடிகளால், *அமர்யாத க்ஷுத்ரச்சலமதிரஸூயாப்ரஸவபூரடி* இத்யாதிப் புடைகளிலே ஆளவந்தார் போல்வார் அருளிச் செய்கிற கணக்கிலே மிகவும் நிஹீநனான என் நிறத்தில் ஆசாபாசம் வைத்து அதனால் புகர் படைத்திருக்கின்ற எம்பெருமானை வானவரீசனென்பது என்ன பெருமை! என்றாராயிற்று. என்கண்பாசம்வைத்த என்பதற்கு வேறு வகையாகவும் பொருளுரைப்பர்; தன் விஷயமான பாசத்தை என் பக்கலிலே (எனக்கு) உண்டாக்கின என்று.

English Translation

Does it behove his glory to be praised by me, -lowly and mertless? Yet I have his love!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்