விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்ணல் மாயன்*  அணி கொள் செந்தாமரைக் 
    கண்ணன் செங்கனி,*  வாய்க் கருமாணிக்கம்,*
    தெள் நிறை சுனை நீர்த்,*  திருவேங்கடத்து,* 
    எண் இல் தொல் புகழ்*  வானவர் ஈசனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணிக்கொள்- அழகுபொருந்திய
செம் தாமரை கண்ணன் - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்
செம் கனிவாய் -  சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும்
கருமாணிக்கம் - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும்
தென் நிறை சுனை நீர் - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய

விளக்க உரை

ஆழ்வீர்! திருமலையில் அடிமை செய்யவேணுமென்று நீர் பாரிக்கின்றீர்; இஃது உமக்கு வாய்க்குமோ வென்ன; எண்ணிறாத நித்ய ஸித்தபுருஷர்களெல்லார்க்கும் தன்னை அநுபவிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறானோரு புரமோபகாரகனல்லானோ அவன்; அன்னவன் நமக்கும் தன்னைத் தந்தருளமென்கிறார். (எம்பெருமான் ஸ்வாநுபத்தை நமக்குத் தந்தருள்வன் என்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டிருக்கவில்லையே என்னவேண்டா; எண்ணில் தொல்புகழ்வானவ ரீசனே என்ற ஈற்றடியில் இக்கருத்து உறைந்து நிற்கும். நமக்குத் தந்தருளாதொழிந்தனாகில் தொன்புகழுடைமை தேறுமோ என்றவாறு.) அண்ணல் என்றதற்குப் பொருளருளிச் செய்யாநின்ற நம்பிள்ளை “குறிஞ்சி நிலத்தில் தலைமகனென்னுதல், ஸர்வஸ்வாமி யென்னுதல்” என்றருளிச் செய்துள்ளார். அண்ணலென்கிறசொல் பொதுவாக ஸ்வாமியைச் சொல்லக் கடவதென்றும்; சிறப்பாகக் குறிஞ்சிநிலத் தலைமகனைச் சொல்லக்கடவதென்றும், தமிழர் கூறுவர். இரண்டுவகையான பொருளும் அவ்விடத்திற்கு ஒக்கும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமென்க. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் இருபதாவது ஸூத்திரத்தின் உரையில், அண்ணல் என்பதற்கு முல்லை நிலத்தலைவன் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது.

English Translation

The cool-springs venkatam Lord of countless glories has beautiful lotus-eyes, a black gem-hue and coral lips.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்