விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எந்தை தந்தை தந்தை*  தந்தை தந்தைக்கும் 
  முந்தை,*  வானவர் வானவர் கோனொடும்,* 
  சிந்து பூ மகிழும்*  திருவேங்கடத்து,* 
  அந்தம் இல் புகழ்க்*  கார் எழில் அண்ணலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும் - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து - தூவின
பூ - புஷ்பங்கள்
மகிழும்- செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற

விளக்க உரை

திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்யமுக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமைசெய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார். எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ஆழ்வார் வாயாரப் பேசுகிறீர் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று. இங்கே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் அழகியவார்த்தை ஒன்றுண்டு; ஆழ்வார் ஜீவாத்மலக்ஷணமானசேஷத்வதத்தை நிரூபிக்கும்போது “அடியாரடியார் தம்மடியார் தமக்கடியாரடியார்” என்று மிகவும் கீழே இறங்கிக் கொண்டுவருவது போலவே, பரமாத்மலக்ஷணமான சேஷித்வத்தை நிரூபிக்கும்போதும் “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை” என்று மேலே மேலே ஏற்றிப் பேசுகிறாரென்று. வானவர் என்று தொடங்கி அங்குள்ளாரும் இங்கே போந்து அடிமை செய்யும்படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானிடத்தில் மேன்மை நீர்மை என்கிற இரண்டு வகையான குணங்களும் உள்ளன; மேன்மை காண்பது பரமபதத்திலே; நீர்மைகாண்பது இந்நிலத்திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்ததாகையாலே அதனைக்காண அங்குள்ளாரும் இங்கே வருகிறார்களாயிற்று. *கானமும் வானரமுமான விவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தையநுஸந்தித்து ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செல்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையின் நிலமிதியாலே. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று விளங்காநின்றான் எம்பெருமான்.

English Translation

The Lord of Venkatam hill, Lord of cloud-hue and eternal glory, is worshipped with flowers, by Indra and all the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்