விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
  வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*
  தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
  எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தொழி குரல் அருவி - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின
திருவேங்கடத்து -திருவேங்கடமலையில்
எழில் கொள் -
நிறம்பெற்ற
எந்தை தந்தை தந்தைக்கு - எமது குலரநாதனான பெருமானுக்கு,
நாம் - அடியோம்
ஒழிவு இல் - ஓய்வில்லாத

விளக்க உரை

திருவேங்கடமுடையானுக்கு எல்லாவடிமைகளும் செய்யப் பெறவேணுமென்று மநோரதிக்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறக முன்னடிகளை அந்வயித்துக்கொள்வது. “காலமெல்லாம் அடிமை செய்யவேண்டும்” என்றாலே போதுமாயிருக்க ஒழிவில் காலமெல்லாம் என்று விசேஷித்துக் கூறினதற்குத் சில ஆசாரியர்கள் ஒரு விசேஷார்த்தம் கூறுவர்களாம்; அதாவது - இனிமேல்வரும் காலங்களில் மாத்திரம் கைங்கரியம் செய்ய விரும்புகிறாரல்லர்; கீழ்க்கழிந்த காலங்களிலும் கைங்கரியம் செய்யவிரும்புகிறீர் என்று. கழிந்துபோனகாலத்தை மீட்கமுடியாதாதலால் இந்த அர்த்தம் எங்ஙனே பொருந்துமெனில்; கீழ்க்கழிந்த காலத்திலும் கைங்கரியம் செய்ய வேணுமென்று பாரிக்கிறாராகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதெனில்; ‘அந்தோ! கீழே வெகுகாலம் வீணாகப் கழிந்துவிட்டதே! என்கிற இழவு நெஞ்சிற்படாதபடி அதனைமறந்து ஆனந்தமயமாகக் கைங்கரியம் பண்ணப் பாரிக்கிறாரென்பதுவேயாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “ஒழிவில் காலமெல்லாமென்று ப்ரஸங்கம் சொல்லுவாருமுண்டு; அதாகிறது, கீழ்க்கழிந்த காலத்தை மீட்கையென்று ஒரு பொருளில்லையிறே...... கீழ்க்கழிந்த காலத்திலிழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயிறேயுள்ளது” என்று.

English Translation

At all times and forever by his side, we must perform stainless service, to the radiant Lord of Venkatam, the hill with streams. He is my father's father.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்