விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
    குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*
    செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
    உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எல்லா உயிர்கள் - ஸகல ஜீவராசிகளையும்
எல்லா உலகமும் - எல்லா உலகங்களையும்
உடையவனை  - உடைமையாகக் கொண்டுள்ள எம்பெருமானைக் குறித்து
குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன் -
குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாரருளிய
செயிர் இல் - குற்றமற்ற

 

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். “உயிர்களெல்லா வுலகமுமுடையவனை” என்று இப்போது சொல்லுவதானது எம்பெருமானுக்கு நித்யஸித்தமாகவுள்ளபடியைச் சொல்லுகின்றதன்று; ஆழ்வாரைத் தரிக்கச் செய்ததனால் எம்பெருமானுக்கு விலக்ஷணமானவொரு புகர் உடையவனாய் ஆகப்பெற்றதுபோல் விளக்கமுற்றான்; அவ்விளக்கத்தை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்கிறபடி. இங்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் காண்மின்; “இவர் தரித்தவாறே அவன் எல்லாவுயிர்களையும் எல்லா லோகங்களையும் உடையவனானான்; ஸர்வரக்ஷகனுக்கு ரக்ஷ்யத்திலே ஒன்று குறையிலும் ரக்ஷகத்வம் குறைபட்டதாமிறே.” குயில்கொள் சோலை = இதுவரையில் ஆழ்வார் உறாவிக்கிடந்தமையால் அங்குள்ள சோலையிற் குணில்களும் உறாவிக்கிடந்தன; இவர் தரித்தவாறே, திருநகரியும் தரித்து அங்குண்டான சோலைகளும் தரித்து அவற்றிலுள்ள குயில்களும் அழகாகக் கூவத்தொடங்கினவென்க. செயிர் - குற்றம்; சொற்குற்றம் பொருட்குற்றம் முதலியன இல்லாத என்றபடி. இப்பத்துக் காசரமே ப்ரக்ருஸம்பந்தத்தைப் போக்குமென்றது - எம்பெருமான் திருவுள்ளத்தில் உகப்பையுண்டுபண்ணி அவ்வழியாலே ஸமீஹிதஸித்தியைப் பெறுவிக்குமென்றபடி.

English Translation

This decad of the perfect thousand songs by Satakopan of kurugur where sweet cuckoos haunt, addresses the Lord who contains all the worlds and souls. Those who can sing it will rid the soul of its envelopes of flesh.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்