விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கூவிக் கூவிக்*  கொடுவினைத் தூற்றுள் நின்று*
  பாவியேன் பல காலம்*  வழி திகைத்து அலமர்கின்றேன்,*
  மேவி அன்று ஆ நிரை காத்தவன்*  உலகம் எல்லாம்,* 
  தாவிய அம்மானை*  எங்கு இனித் தலைப்பெய்வனே?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொடு வினை - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய
தூற்றுள் நின்று - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று
பல காலம் - அநேக காலம்
வழி திகைத்து - வழி தெரியாமல் சுழன்று
அலமருகின்றேன் - வருந்திக் கிடக்கின்ற

 

விளக்க உரை

ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார். பிரானே! நான் இருக்குமிடமோ ஸம்ஸாரம்; இதுவோ தூறு மண்டிக்கிடக்கிறது. இங்கிருந்து கிளம்ப வழியில்லை. இருந்தவிடத்தில் நின்றும் பலகாலும் கூப்பிடாநின்றேன். நீ ஆபத்துக்கு உதவுபவனல்லையாகில் நான் இவ்வளவு கூப்பீடு செய்யமாட்டேன்; திருவாய்ப்பாடியில் பசுக்களெல்லாம் பெரு மழையில் நோவு பட்டக்காலத்தில் ஒன்றின்மேல் ஒரு துளி விழாதபடி ஒரு மலையைத் தூக்கியெடுத்து ரக்ஷித்தாய்* அங்ஙனம் ஒரு ஊர்க்கு உதவின மாத்திரமன்றிக்கே எங்குமொக்க எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தருளினாய்; அன்று நான் எந்த மூலையிலே கிடந்தேனோ? அப்படி ஸர்வஸ்வதாகம் பண்ணின காலத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்புகுகிறேன்? அஸாத்யமான விஷயத்தில் நாம் நசை பண்ணுவது வீண் என்று தெரிந்தும் வாளா இருக்க மாட்டிற்றிலேன்; கூப்பீடே போதுபோக்காக விருக்கின்றேன் என்றாராயிற்று. கொடுவினைத்தூற்றுள் நின்று” என்றவிடத்திற்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- கூப்பீடு கேட்டு இரங்கியெடுப்பதாக ஈச்வரன் கை நீட்டினால், நீட்டினகை வாங்கவொண்ணாத நிலத்திலேயிற்றுக் கூப்பிடுவது” பாவியேன் என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை:- ஸ்ரீஜநகராஜன் திருமகள் ஸ்ரீவால்மீகிபகவானாஸ்ரமபரிஸரத்திலே கூப்பிட்டாப்போலே, சிலர் ஐயோவென்னக் கூப்பிடுகிறேனோ?’

English Translation

I stand and call from deep inside in my Karmic tomb and flounder through many dismal paths. Then my Lord did grace the cows and walk the Earth. O where can I find him now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்